India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மானூர் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் (29) பாரில் மது அருந்தியபோது, மற்றொரு தரப்பினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆல்பர்ட் தனது நன்பர்களுடன் பார் அருகே பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த கும்பல் இளைஞர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பித்தனர். இதில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சுடலைமணி (19), சந்திரன் (24), பிரகாஷ்ராஜ் (25), பெரியசாமி (25) ஆகிய 4 பேரை கைது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்களை, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று அறிவித்திருந்தார். அதன்படி அரியலூர் சட்டமன்ற தொகுதியின் மாவட்ட செயலாளராக அங்கனூர் சிவா என்பவரை நியமனம் செய்துள்ளார். இவர் ஏற்கனவே மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் மீண்டும் அவருக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விசிக நிர்வாகிகள், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மங்காவிளை அருந்ததி என்பவரிடம் 2005-ஆம் ஆண்டு ஆசிரியை வேலை வாங்கித் தருவதாக கூறி கொல்லங்கோடு குசலகுமார் (60) – சதிகுமாரி (59) தம்பதியர் ரூ.2.50 லட்சம் வாங்கி விட்டு தலைமறைவாகினர். புகாரின்பேரில் இருவர் மீதும் குற்றத்தடுப்பு போலீசார் வழக்குப்பதிந்து தேடிய நிலையில் கேரளாவில் 20 ஆண்டுகளாக இருவரும் பெயர் மாற்றி வசித்தது தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு நேற்று (ஜன.3) சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே!கள்ளக்குறிச்சி – 04151-222449, சங்கராபுரம் – 04151-235329, திருக்கோவிலூர் – 04153-252316, உளுந்தூர்பேட்டை – 04149-222255, சின்னசேலம் – 04151-257400. மிக முக்கிய எண்களான இவற்றை உடனே SAVE பண்ணி, மற்ற நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க

பெருந்துறை அருகே பணிக்கம்பாளையத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜரியாகாஜி என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது 13-வயது மகள் ருக்கியா காஜி, அடிக்கடி செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி, பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <

நாமக்கல் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் விருப்பமான அளித்த நிர்வாகிகளுக்கு ,எதிர்வரும் ஜன.11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:45 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

திண்டுக்கல் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <
Sorry, no posts matched your criteria.