India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➡️ திருச்சி மாவட்டத்தில் நாளை 55,000 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!
வேலைவாய்ப்பு மோசடிகளிலிருந்து எச்சரிக்கையுடன் இருக்க திருச்சி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மோசடியில் ஈடுபடுவோர் பொதுவாக அதிக சம்பளம், பணிநியமனம் ஆகியவற்றிற்கு உறுதியளிக்கின்றனர். வேலைக்கு விண்ணப்பிக்க அல்லது நேர்காணலுக்கு சட்டபூர்வ நிறுவனங்கள் பணம் கேட்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். வேலை மோசடிகள் குறித்த புகார்கள் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100-ஐ அழைக்கலாம். SHARE NOW
மணப்பாறை எடத்தெரு பகுதியில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பழைய காலனியைச் சேர்ந்த பெயிண்டர் முருகேசன் என்பவர் மீது கார் ஏறி இறங்கியது. அதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். கார் ஓட்டுநர் அழகிரிசாமி தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி மாநகர காவல் (10.07.2025) இரவு பணி, கண்டோன்மென்ட் சரக காவல் உதவி ஆணையராக யாஷ்மின் பானு பணியாற்றுகிறார். முக்கிய காவல் நிலையங்களில் சிவபிரகாசம் (பொன்மலை), திருமதி. சரஸ்வதி (கே.கே.நகர்), திரு. கோசலைராமன் (ஸ்ரீரங்கம்), திருமதி. ரத்தத்தின் (காந்தி மார்க்கெட்), திரு. பாலகிருஷ்ணன் (பாலக்கரை), திரு. சண்முகவேல் (உறையூர்) ஆகியோர் காவல் ஆய்வாளர்களாக பணியில் உள்ளனர்.
E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E- பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW
உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<
திருச்சி மணிகண்டம் மேக்குடி கிராமத்தில் புதிய வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த பிரவீன் குமார் என்பவரிடம் மணிகண்டம் மின்வாரிய வணிக ஆய்வாளர் அருளானந்தம் பத்தாயிரம் லஞ்சம் கேட்டு பெற்ற போது திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான குழுவினர் கையும் களவுமாக பிடித்து இன்று நண்பகல் கைது செய்தனர். கைதான அருளானந்தத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
‘ஜனநாயகம் செழிக்க வேண்டுமானால் பத்திரிக்கை சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். சாத்தூரில் நடந்த நிகழ்வுக்கு, தனிப்பட்ட முறையிலும், கட்சியின் சார்பிலும் பத்திரிகை, ஊடக நண்பர்களிடம் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
நீங்கள் செய்யாத போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது போல உங்களது செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என திருச்சி காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் குறுஞ்செய்திகளில் வரும் லிங்கை தொடுவதன் மூலம் உங்கள் வங்கி கணக்குகளில் உள்ள பணம் திருடப்படலாம். சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ அழைக்கலாம். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
கடலூர் அருகே செம்மங்குப்பம் நேற்று முன்தினம் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பாக 13 பேருக்கு ரயில்வே நிர்வாகம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் இன்று ரயில் லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித்குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன் உட்பட 11 பேர் இன்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.