India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சியில் (18 ஜூலை) காஞ்சி, வேலூர்,அரக்கோணம், ராணிப்பேட்டை திருவண்ணாமலை போன்ற இடங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில விவசாய மற்றும் வியாபாரிகள் நல சங்க தலைவர் கே.எழில் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு வங்கி கடன், ஏற்றுமதி, மற்றும் ஒப்பந்த விவசாயம் பற்றிய ஆலோசனைகளை வல்லுநர்கள் வழங்க உள்ளனர். 98942 22459 என்ற எண்ணில் கேட்டு பயன்பெறலாம்.
▶காஞ்சிபுரத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
▶தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்.
▶<
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். பாலிசி குறித்து தெரிந்து கொள்ள காஞ்சிபுரம் அதிகாரிகளை (044-27222901, 044-27224600) தொடர்பு கொள்ளுங்கள். <<17027973>>தொடர்ச்சி<<>>
காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் அடுத்த நல்லூரில் சமாதானம் செய்வதற்காக சென்ற சித்தியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. அண்ணன் – தம்பி இடையிலான இடப்பிரச்சனையில், சித்தி சுமதி சமாதானம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த மகன் உறவு கொண்ட துரை என்பவர் சுமதியின் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பெரும்புதூர் வட்டத்தில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் டாட் என்ஐசி டாட் இன் என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (10.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
இன்று ஜூலை 10ஆனி மாத பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரத்திலிருந்து தி.மழைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக காஞ்சிபுரம் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பயணியர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் திரளான பக்தர்கள் நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 5,000க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள், பெரிய தொழில் அமைப்புகள் இயங்குகின்றன. இவற்றில் 2,000க்கும்
தொழில் உரிமம் பெற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2,000க்கும் அதிகமானோர் தொழில் உரிமம் கூட இல்லாமல், கடை நடத்துகின்றனர். உரிமம் பெறாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நித்திய கல்யாண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பெருமாளுக்கு 365 நாளும் திருக்கல்யாணம் நடக்கும் சிறப்பான கோயிலாகும். மேலும் இந்த பெருமாளை வந்து தரிசித்தால் சொந்தமாய் வீடு கட்டுவதர்க்கான பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் திருமண தடையும் அகலும் என்பது ஐதிகமாக இருக்கிறது. வீடு கட்ட காத்திருக்கும் உங்கள் நன்பர்களுக்கு பகிரவும்.
Sorry, no posts matched your criteria.