India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இங்கு சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். திருவள்ளூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-27660120, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <

திருவள்ளூர்: திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம், வெங்கடாபுரம் கிராமத்தைச் சோ்ந்த, பெண்கள் நேற்று(பிப்.10) திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு, ஒன்றிய அலுவலா்களிடம் 100 நாள் வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக புகாா் தெரிவித்தனா். அப்போது ஒன்றிய அதிகாரிகள் பெண்களிடம் சமரசம் பேச்சு நடத்தி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடா்ந்து, பெண்கள் கலைந்து சென்றனா்.

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <

திருவள்ளூர் அடுத்த பட்டறைபெருமத்தூர் பகுதியில் திருப்பதி நெடுஞ்சாலை சுங்கச்சவாடி செயல்பட்டு வருகிறது. அதில், பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வெடுக்கும் கண்டெய்னர் அறையில் நேற்று முன் தினம் இரவு திடீரென தீப் பிடித்தது. பணியில் இருந்த ஊழியர்கள் விரைந்து வந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அறையில், சாமிப் படத்திற்காக ஏற்றப்பட்ட விளக்கில் இருந்து தீப் பிடித்தது தெரிய வந்தது.

திருநின்றவூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று(பிப்.11) காலை 9:00 – மாலை 5:00 வரை நெமிலிச்சேரி, பிரகாஷ் நகர், பாலாஜி நகர், நடுக்குத்தகை, சி.டி.எச்.ரோடு, வேப்பம்பட்டு, அயத்தூர், இந்திரா நகர், ராஜாங்குப்பம், கொசவன்பாளையம், அரண்வாயல் குப்பம், பெரியார் நகர், நாசிக் நகர், பாக்கம், புட்லூர், கூடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. <<19106967>>தொடர்ச்சி<<>>

கே.ஜி.கண்டிகை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று(பிப்.11) காலை 9:00 – மாலை 5:00 வரை, கே.ஜி.கண்டிகை, செருக்கனூர், புச்சிரெட்டிப்பள்ளி, கிருஷ்ணசமுத்திரம், வீராநல்லூர், கோரமங்கலம், மதுராபுரம், சிறுகுமி, எஸ்.அக்ரஹாரம், குடிகுண்டா, எஸ்.பி.கண்டிகை, கிருஷ்ணாகுப்பம் மேடு, வங்கனூர், அம்னேரி, கொண்டாபுரம் மற்ரும் அதன் சுற்றுவட்டாரங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாஜிபுரம். என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி(31). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் ஏற்பட்ட தகராறால் மனவேதனை அடைந்த ராஜலட்சுமி, தன் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(10.02.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(10.02.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
Sorry, no posts matched your criteria.