Pondicherry

News February 7, 2026

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் சர்வதேச மாநாடு

image

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், அதிநவீன விபத்து சிகிச்சை குறித்த சர்வதேச உச்சி மாநாடு இன்று காலை தொடங்கியது. இந்த மாநாட்டை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு, நவீன சிகிச்சை முறைகள் குறித்து கருத்துப் பகிர்வு செய்தனர்.

News February 7, 2026

புதுவை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News February 7, 2026

புதுச்சேரி: புதிய ‘விட்டாபிளஸ்’ பால் அறிமுகம்

image

புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே நிறுவனம், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘டி’ சேர்க்கப்பட்ட விட்டாபிளஸ் டோன்ட் பாலை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த கொழுப்பு கொண்ட இந்த பால், அரை லிட்டர் பாக்கெட் ரூ.24 என விற்பனைக்கு வருகிறது. பாண்லே நிறுவனம் பால், மோர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

News February 7, 2026

புதுச்சேரி: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 7, 2026

புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க..!

News February 7, 2026

புதுச்சேரியில் காவலர் பதவிக்கு நாளை எழுத்து தேர்வு

image

புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு நாளை (8.2.26) புதுச்சேரியில் அமைக்கப்பட்ட 5 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கின்றது.
இத்தேர்வின் முதல் தாள், காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையும், 2-ம் தாள் மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும் என புதுச்சேரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார்.

News February 7, 2026

புதுவை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News February 7, 2026

புதுச்சேரியில் நர்சிங் மாணவி மாயம்

image

புதுச்சேரி மாநிலம் தருமபுரி கலைமகள் நகரைச் சேர்ந்த முருகவேலின் மகள் மோகனப்பிரியா (19), நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற இவர், வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

News February 7, 2026

புதுச்சேரி: இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

காரைக்கால் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக இன்று (07.02.2026) காலை 10.00 மணி முதல், மதியம் 2.00 மணி வரை மின்தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரவு குட்டை வீதி, ஆனை பிள்ளை மறைக்கர் வீதி, கால்மாட்டு வீதி, காதர் சுல்தான் வீதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று உதவி பொறியாளர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News February 7, 2026

புதுச்சேரியில் குறை தீர்வு நாள் முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி டிஜிபி சாலினி சிங் உத்தரவுபடி, ஒவ்வொரு சனிக்கிழமையும் அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி 7ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற உள்ளதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

error: Content is protected !!