India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை பல்கலைக்கழகத்தின் முதுநிலை மற்றும் தொழிற்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை.11) மாலை வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://egovernance.unom.ac.in/results/ என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இத்தேர்வுகளின் முடிவுகளை, மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் 130 இடங்களில் நடைபெற உள்ள “உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்களில் மட்டுமே இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான படிவங்கள் வழங்கப்படும். தனியார் கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் போலியாக விற்கப்படும் விண்ணப்பங்களை வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூருக்கு 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது செங்கண்மால் செங்கண்மாலீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவராக செங்கண்மாலீஸ்வரர் உள்ளார். இக்கோயில் 3 ஆம் நூற்றாண்டில் முற்கால சோழப் பேரரசர் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது. தினசரி வாழ்க்கையின் அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற்று, மன அமைதியைப் பெற இக்கோயில் ஒரு சிறந்த இடமாகும். மன அழுத்தம் உள்ள உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
சென்னை பாரீஸ் கார்னர் அருகே உள்ள ஜார்ஜ் டவுன் பகுதியில் அமைந்துள்ளது கச்சாலீஸ்வரர் கோயில். இது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இங்கு மூலவர் லிங்கத்தின் பின்னால் ஐந்து தலைகளுடன் கூடிய சதாசிவம் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை தீபாராதனை செய்யப்படும்போது மட்டுமே காண முடியும். மன நிம்மதியை இழந்து தவிப்பவர்கள் இங்கு சென்று தியானம் செய்து வழிபட்டால் ஆறுதல் அடைய முடியும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!
வேலூரில் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவலம் ஸ்ரீ வில்வனாதேஸ்வரர் கோயில். இது தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள சிவன் வில்வ இலைகளால் பூஜிக்கப்பட்டதால் வில்வனாதேஸ்வரர் என்று பெயர் பெற்றதாக ஐதீகம். இந்த கோயில் மன அமைதிக்கு ஒரு புகலிடமாக திகழ்கிறது. வாழ்க்கையில் தொடர்ந்து துயரங்களை சந்திப்பவர்கள் இங்கு வந்து மனமுருகி வேண்டினால் துயரம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர்!
புத்தாநத்தம் கடைவீதியில் உள்ள மின்மாற்றியில் இன்று மின்பாதை ஆய்வாளர் ஜேம்ஸ் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதில் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெற்று பூர்த்தி செய்து செயற்செயலாளா், மாவட்ட சுகாதார அலுவலகம், 7-வது தளம், ஆட்சியா் அலுவலக வளாகம், மயிலாடுதுறை 609001 என்ற முகவரிக்கு விரைவுத் தபால் (அ) பதிவுத்தபால் மூலம் ஜூலை 21க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி- 2ஆம் தேதி ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், அந்த பெண்ணிற்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டதோடு கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இந்த வழக்கில் கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிவிட்ட ஹேம்ராஜ் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தண்டனை விவரம் திங்களன்று வெளியாகவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது வீட்டிற்குள் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் உடனான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன்பு இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், லண்டனில் இருந்து இது வாங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமேஸ்வரம் – விழுப்புரம் ரயில் சேவை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்த நிலையில் விழுப்புரம் – ராமேசுவரம் சிறப்பு ரயில் சேவையானது 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக வரும் 12ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை 6 முறைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.