Cuddalore

News July 6, 2025

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் தொலைபேசி எண்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (05/07/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

கடலூர்: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

image

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!

News July 5, 2025

கடலூரில் சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி..!

image

கடலூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் (அ) அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவலுக்கு மாவட்ட தொழில் மையத்தை (04142- 290116) தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க

News July 5, 2025

கடலூர் துறைமுகத்தை இயக்க ஒப்பந்தம்

image

கடலூர் துறைமுகம் 111 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த துறைமுகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு உரங்கள், நிலக்கரி ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. இதையடுத்து பல்வேறு காரணங்களால் துறைமுகத்தின் செயல்பாடு முடங்கியது. இந்நிலையில் கடலூர் துறைமுகத்தை மீண்டும் இயக்குவதற்காக தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு கடல்சார் வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

News July 5, 2025

கடலூர்: 12th போதும், ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து வரும் ஜூலை.18-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்.

News July 5, 2025

கடலூர்: மனை வைத்திருப்பவர்கள் கவனிக்க

image

கடலூர் மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <>onlineppa.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News July 5, 2025

ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

image

சிதம்பரம் அடுத்த சி.கொத்தங்குடியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (37). சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ராஜேஷின் வீட்டில் நேற்று மர்மநபர்கள் முன்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 6 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூலை 4 ) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

கடலூரில் முன்னாள் படைவீரர்களுக்கான முகாம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (10.7.2025) அன்று முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான ஓய்வூதிய குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் ஓய்வூதிய ஆவணங்களில் பெயர் மற்றும் இதர தகவல்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், ஆதார் புதுப்பித்தல் போன்றவைகளுக்கு உடனே தீர்வு காணப்படவுள்ளது. எனவே முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News July 4, 2025

கடலூரில் 2000 ஆண்டு பழமையான கோயில்

image

கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணத்திலுள்ள பூவராக சுவாமி கோயில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இங்குள்ள மூலவர் பூவராகவ சுவாமி முகம் பன்றி உருவிலும், மேனி மனித உடலுமாக காட்சி அளிக்கிறார். ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது சுயம்பு தலமாக இத்தலம் விளங்கி வருகின்றது. இங்குள்ள புஷ்கரணியில் நீராடி அரசமரத்தை சுற்றி வந்து பூவராகரை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. SHARE செய்யவும்!

error: Content is protected !!