India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➡️ தேனி மாவட்டத்தில் நாளை (ஜூலை.12) குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
தேனி மக்களே, தமிழகத்தில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஜூலை.10 முதல் ஆகஸ்ட்12ம் தேதி வரை <
தேனி மாவட்டத்தில் ஜூலை.12 ஆண்டிபட்டி கோரையூத்து சமுதாயகூடம், பெரியகுளம் சருத்துப்பட்டி, தேனி காட்டுநாயக்கன்பட்டி, போடி பெருமாள் கவுண்டன்பட்டி, உத்தமபாளையம் டி.பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளில் நுகர்வோர் குறைதீர் முகாம் நடைபெறும். இதில், ரேஷன் கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.
தேனி , அரண்மனைபுதூர் கிழக்கு தெருவை சேர்ந்த பெரியகருப்பன் என்பவரது மகள் முத்துமணி. இவர் திருமணம் முடிந்து கணவர் வீட்டார் வரதட்சனை கேட்டு தொல்லை செய்ததால், அவரது தந்தை வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் மன உளைச்சலில் இருந்த முத்துமணி அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறப்பு சம்மந்தமாக தந்தை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை.
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் தேனி கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பதவிகளை சரண்டர் செய்யாதே, துணை சுகாதார நிலையம் பராமரிப்புக்கான நிதியை முறையாக வழங்கிடு, காலி பணியிடங்களை நிரப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முழங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட தலைவர் வசந்தா பொருளாளர் எலியட், லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Manager – Loan Approval)க்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழ்நாடு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊதியமாக 15,000 வழங்கபடுகிறது. டிகிரி படித்திருந்தால் போதும் இதற்கு விண்ணபிக்கலாம். இந்த<
தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த மானியத்தில் 40% மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகின்றன. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க உழவன் செயலி (Ulavan App) வழியாக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.மேலும் விரிவான தகவல்களைப் பெற, தேனி மாவட்டத்திலுள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். அனைவருக்கும் SHARE செய்யுங்க.
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த <
தேனி மக்களே சாதி, குடிமை, குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா, உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம்.அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04546-255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்
தேனி மாவட்டம் ,பெரியகுளம் அருகே எ .புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விமால் (32 வயது). அரசு ஒப்பந்ததாரர். இவர் நேற்று முன்தினம் பணிக்கு சென்றுள்ளார். அவரது மனைவி பிரியா கார் ஓட்டும் பயிற்சிக்காக சென்றுள்ளார். மர்ம நபர்கள் வீட்டினருகே மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து, ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை திருடி சென்றனர். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.