Theni

News January 2, 2026

தேனி: சாலை விபத்தில் முதியவர் பலி

image

கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுருளி (78). இவர் நேற்று (டிச.31) மாலை திண்டுக்கல்-குமுளி சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சுருளி படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

தேனி: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

image

தேனி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக் செய்து <<>>அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News January 1, 2026

தேனி: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்!

image

தேனி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தேனி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04546-250387 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News January 1, 2026

தேனி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?..

image

தேனி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தேனி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000451, 9445000452 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News January 1, 2026

போடி அருகே மனைவி, மாமியாரை தாக்கிய கணவர்

image

போடி அருகே மணியம்பட்டியை சேர்ந்தவர் திவ்யா (28). இவரது கணவர் நாராயணன் (35). இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் திவ்யா கோபித்துக் கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (டிச.31) மாமியார் வீட்டுக்கு சென்ற நாராயணன் மனைவி மற்றும் மாமியாரை தாக்கி உள்ளார். போடி தாலுகா போலீசார் நாராயணனை கைது செய்தனர்.

News January 1, 2026

தேனி: சட்டக் கல்லுாரி மாணவர் மீது தாக்குதல்

image

பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் கபிலன் (20). இவர் தேனி அரசு சட்டக்கல்லூரியில் 3.ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் இவருடன் படிக்கும் வசந்தகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வசந்தகுமார் அவரது நண்பர்கள் விக்னேஷ்வரன், சரண், செந்தில்குமார் ஆகியோர் சேர்ந்து கபிலனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பழனிசெட்டிபட்டி போலீசார் 4 பேர் மீதும் வழக்கு (டிச.31) பதிவு.

News January 1, 2026

தேனி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

தேனி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும் புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News January 1, 2026

தேனியில் அதிர்ச்சி….. 339 பேர் பலி

image

தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 28 கொலை வழக்குகள், 7 கொள்ளை வழக்குகள், 3 பெண்கள் வன்கொடுமை வழக்குகள், 35 போக்சோ வழக்கு என 81 வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. புகையிலை, போதைப்பொருட்கள் தொடர்பாக 2467 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓராண்டில் 1239 வாகன விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 339 பேர் இறந்துள்ளனர்.

News January 1, 2026

தேனி: கிணற்றில் அழுகிய நிலையில் சடலம்….திடீர் திருப்பம்

image

போடியை சேர்ந்தவர் ரமேஷ், 2018ல் காணாமல் போனார். இவரது மனைவி மேகலா புகாரில் போலீசார் விசாரித்தனர். 2018 ல் வீரபாண்டி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ரமேஷ் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதில் போடி பாண்டி என்பவர் சொத்து தகராறில் ரமேஷை கொலை செய்தது தெரிந்தது.இவ்வழக்கில் தொடர்புடையவர்களை நவம்பரில் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சண்முகசுந்தரத்தை 37, கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!