India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் இன்று (03.01.2026) காலை 09 மணி முதல் மாலை 04 வரை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மக்களே நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT..!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் 03.01.2026 சனிக்கிழமை மற்றும் 04.01.2026 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் முகவரி திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <

தேனி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99020 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

கம்பம் பகுதியில் உள்ள தனியார் மஹால் அருகே நேற்று (ஜன.1) 54 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் கம்பம் வடக்கு போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பத்ரகாளி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜன.1) பத்திரகாளியின் முதல் கணவரான செல்லப்பாண்டி என்பவர் ஜெயக்குமார் உடன் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10th படித்தவர்கள் <

கூடலுார் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் நேற்று முன்தினம் புல் அறுக்க சென்ற சங்கர் அவரது மனைவி கணேஸ்வரி ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். லோயர்கேம்ப் போலீசார், கம்பம் தீயணைப்புத் துறையினர் மாயமான இருவரையும் தேடினர். 2வது நாளாக நேற்று முன்தினம் (டிச.31) நடைபெற்ற தேடுதல் பணியில் கணேஸ்வரியின் உடல் மீட்கப்பட்டது. சங்கர் உடல் கிடைக்காததால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.