Tamilnadu

News January 1, 2026

புத்தாண்டு: காஞ்சிபுரத்தில் தீவிர போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை!

image

புத்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரத்தில் டிச.,31 இரவு 7 மணி முதல் 36 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள உள்ளனர். கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட பகுதிகளில் ரோந்து காவல் பணிகள் நடைபெறும். மது அருந்தி வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸ், சாகசங்களுக்கு தடை விதித்துள்ளனர். விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News January 1, 2026

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (31.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 1, 2026

இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் தினமும் காவலர்கள் ரோந்து பணிக்கு செல்கின்றனர். இன்று 31.12.2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் உங்களுக்குத் தெரிந்தவுடன் இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொது மக்களுக்கு இந்தத் தகவல் பேருதவியாக இருக்கும்.

error: Content is protected !!