India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.31) மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஸ் தகவல் தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் டிசம்பர்-31 இன்று (1st Half) பென்னாகரம் காவல்துறை இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்: பென்னாகரம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், 94498170199, தலைமையில் பாபுசுரேஷ்குமார் பென்னாகரம் பி எஸ் 9498103661, முரளி ஒகேனக்கல் பி எஸ் 9498106526, செல்வமணி பென்னாகரம் டிராபிக் பி எஸ் 9498170003, தமிழரசி இண்டூர் பி எஸ் 9498110740 மேலும் அவசர உதவிக்கு 100 காவல் கட்டுப்பாட்டு அறை எண் :04342-233850

வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் இன்று நள்ளிரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். பைக்கில் வேகமாக, சாகசம் செய்யவோ கூடாது. மீறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்படும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை சார்பில் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், வருகிற 2-ந் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு வருகிறார். முதல் கட்டமாக சென்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் 3-ந் தேதி வேலூர் ஸ்ரீபுரம் தங்ககோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளில் வேலூர் போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில் 1300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (டிச.31) இரவு 10 மணி முதல், நாளை(ஜன.1) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-II & IIA தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 05.01.2026 அன்று தொடங்குகின்றன. பட்டதாரி இளைஞர்களுக்காக நடத்தப்படும் இதில் மாதிரித் தேர்வுகள், 3000+ நூல்கள் மற்றும் இலவச வைஃபை வசதிகள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெறும் இதில் பங்கேற்க இணையதளம் வாயிலாகப் பதிவு செய்யலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று (டிச.31) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் (அ) 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட உதய மார்த்தாண்டபுரம் அரசுப் பள்ளியில், தெற்கு பள்ளி மேட்டு பகுதியைச் சேர்ந்த 42 பயனாளிகளுக்கு வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், இலவச குடிமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினர்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட காவல்துறையின் சார்பில், முன்னெச்சரிக்கை அறிவுரைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மது அருந்திவிட்டு வாகனங்களில் வேகமாக செல்லக்கூடாது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில், வாகன சாகசங்கள் ஒலி எழுப்பும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்கவும் உள்ளிட்ட அறிவுரைகளை, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கருண் கரட் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.