India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை– சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ஜன-11, 18 தேதிகளில் கோவையிலிருந்து சென்னைக்கும், ஜன-12, 19 தேதிகளில் சென்னையிலிருந்து கோவைக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் போத்தனூர்–சென்னை, சென்னை–போத்தனூர், மங்களூரு–சென்னை, செங்கோட்டை–போத்தனூர் வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

திண்டுக்கல் காந்திகிராமம் மற்றும் அம்மையநாயக்கனூர் துணை மின்நிலையங்களில் நாளை (ஜனவரி 5, திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, காந்திகிராமம், பித்தளைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, கொடைரோடு, அம்மையநாயக்கனூர், சிப்காட் தொழில் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளனர்.

வாடகை வீட்டில் ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE

வாடகை வீட்டில் ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE

1) மனித உரிமைகள் ஆணையம் -044- 22410377
2) போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3) போலீஸ் மீது ஊழல் புகார் அளிக்க – 9840983832
4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5) முதியோருக்கான அவசர உதவி -1253
6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7) நுகர்வோர் எண்- 180011400
8) ரத்த வங்கி – 1910
9) கண் வங்கி -1919
10) விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இத்தகவலை SHARE பண்ணுங்க.

நாகை மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் கோபு (60). இவர் லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு மடத்தூர் வந்துள்ளார். லாரியை வெளியில் நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த இளைஞர்கள் கோபுவிடம் பணம், செல்போன் கேட்டுள்ளனர். தரமறுத்த கோபுவை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து சிசிடிவி அடிப்படையில் ஜெயக்குமார் (20), வேல்முருகன் (19), காமேஷ் (19) ஆகிய மூவர் கைது.

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

சேலம்: நங்கவள்ளி அருகே ஏர்வாடி பகுதி விவசாயி பழனிசாமியின் 10 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது. வனத்துறையினர் ஆடுகளைக் கடித்துக் குதறியது சிறுத்தையா? அல்லது காட்டு நாய்களா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மேட்டூர், மேச்சேரி,கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இது போன்ற சம்பவம் தொடர்கிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்? என விவசாயிகள் எதிர்பார்ப்பு!

பெரம்பலூர் வட்டத்தில் (4892), குன்னம் வட்டத்தில் (5049), வேப்பந்தட்டை வட்டத்தில் (4793), ஆலத்தூர் வட்டத்தில் (4053) நபர்கள் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான ரேஷன் குடிமை பொருட்கள் இன்று (04.01.2026), நாளை (05.01.2026) மற்றும் (06.01.2026) ஆகிய தேதிகளில் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளராக ரத்தினவேல் அவர்கள் ஏற்கனவே செயல்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து இதற்கு முன்பு மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்த கிருஷ்ணகுமார் என்பவரை, பெரம்பலூர் மேற்கு மாவட்ட புதிய செயலாளராக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.