Tamilnadu

News March 30, 2026

பாலக்கோட்டில் சோகம்: மரத்திலிருந்து விழுந்தவர் பலி

image

பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (74) என்பவர், புளி உலுக்க மரத்தில் ஏறியபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். பாலக்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 30, 2026

கடலூர்: ரூ.5 லட்சம், 13½ பவுன் நகை கொள்ளை

image

குள்ளஞ்சாவடி அடுத்த பேய்க்காநத்தத்தை சேர்ந்தவர் வீரமணி(56). நேற்று இவர் தன்னுடைய வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரிக்கு சென்றார். அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம், 13½ பவுன் நகை, 650 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News March 30, 2026

கடலூர்: மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை

image

புதுக்கோட்டை கிழக்கு 3 ஆம் வீதியை சேர்ந்தவர் விக்னேஷ்(32). இருவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப சண்டை ஏற்பட்டது.இவரது மனைவி அவர் தந்தை வீட்டில் 1.5 வருடமாக வசித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பால் நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேட்பாளர் உடன் 5 பேர் மட்டுமே அனுமதி!

image

தமிகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கிறது. இந்நிலையில் வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்கு 100 மீட்டர் எல்லைக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பு மனு தாக்கலின் போது அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்பதிவு செய்யப்படுவதால் யாரும் தேவையற்ற விவாதத்திலும் ஈடுபட கூடாது என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

நெல்லை: ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை

image

நெல்லையில் உள்ள நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 3 ஆசிரியைகள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தபால் மூலம் புகார் மனு ஒன்று அனுப்பியுள்ளனர். அதில், பள்ளியில் எங்களுக்கு தாளாளர் கணேஷ்குமார் பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்து வந்ததாகவும், இரவில் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் தாளாளர், தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிந்துள்ளனர்.

பெரம்பலூர்: வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

image

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவி பாட் கருவிகளை எவ்வாறு இயக்குவது குறித்த சிறப்பு பயிற்சி கூட்டம் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியில் நடைபெற்றது. மேலும் அஞ்சல் வாக்கு சீட்டு விண்ணப்பம் பெறுவது குறித்தும் விலக்கப்பட்டது.

News March 30, 2026

நாகை: போலீசாரை தாக்கிய இளைஞர் கைது

image

நாகூரை அடுத்து மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, கார் ஓட்டிய ஹரிஹரன்(26) என்பவருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர், போலீசாரை தாக்கினார். இதுகுறித்து புகாரின்படி, நாகூர் போலீசார் வழக்கு பதிந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு, அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!
↑