India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா அ.பு.ம.கு.க., வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அ.பு.ம.கு.க.நிர்வாகிகள் 23 பேருக்கும் கூட்டணி கட்சிகள் 2 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், பரமக்குடி(தனி) தொகுதியில் அமிர்தா பாலுசாமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா அ.பு.ம.கு.க., வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அ.பு.ம.கு.க.நிர்வாகிகள் 23 பேருக்கும் கூட்டணி கட்சிகள் 2 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், பரமக்குடி(தனி) தொகுதியில் அமிர்தா பாலுசாமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோயல் (14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவர் அந்தப் பகுதியில் உள்ள தெப்பக்குளத்திற்கு நண்பர்களுடன் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்தார். தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நான்கு இடங்கள் தயார். திங்கள்கிழமை முதல் நாளாக இருப்பதால், அலுவலகங்களுக்கு அருகில் 200 மற்றும் 100 மீட்டர் தூரத்தில் வெள்ளைக்கோடுகள் வரையப்பட்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் தேர்தலில், தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், இன்று பெரம்பூர் தொகுதியில் மதியம் 2 மணி முதல் 4 மணிவரை விஜய் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். இதனையடுத்து, மாலை 5 மணி முதல் 6 மணிவரை கொளத்தூர் தொகுதியிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை, வில்லிவாக்கம் தொகுதியிலும் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (மார் 31) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதை சார்ந்த மதுக்கூடங்கள், கிளப்புகளை சார்ந்த மதுக்கூடங்கள், ஓட்டல்களை சார்ந்த மதுக்கூடங்கள் & உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நாமக்கல், பெரியப்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி (30). இவர் நேற்று காலை நடைபயிற்சி பயிற்சி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள கிணற்றுக்கு சென்று பார்த்தனர். அங்கு மகேஸ்வரியின் காலணி மிதந்தது. நாமக்கல் தீயணைப்பு படைவீரர்கள், ஒரு மணி நேரத்திற்கு பின், அவரது உடலை சடலமாக மீட்டனர். இது குறித்து, நாமக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கலைவாணன்(46). இவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டை போடுவது வழக்கம். சம்பவத்தன்று மது அருந்த பணம் கேட்டு மனைவி தமிழ்மணியை அடிக்க சென்ற போது சுவரில் மோதி தலையில் காயம் ஏற்பட்டது. அதோடு தூங்க சென்றவரை காலையில் எழுப்ப சென்ற போது கலைவாணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா அ.பு.ம.கு.க., வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அ.பு.ம.கு.க.நிர்வாகிகள் 23 பேருக்கும் கூட்டணி கட்சிகள் 2 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், மானாமதுரை(தனி) தொகுதியில் திலக்ராஜ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்றத் தொகுதிக்கு, திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் எல்.ஜெயசுதா சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி கஜேந்திரனை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். ரத்த தானம் செய்வது போல நடித்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்கு உள்ளன இவர், இந்த முறை வெற்றி பெறுவாரா? கமெண்ட்ல சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.