Tamilnadu

News April 14, 2026

தூத்துக்குடி: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏட்டு சஸ்பெண்ட்

image

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கூலி தொழிலாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு துணையாக அவரது மனைவி இருந்தார். இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிப்காட் போலீஸ் ஏட்டு கோபாலகிருஷ்ணன் அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பான புகார்களை அடுத்து ஏட்டு கோபாலகிருஷ்ணனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து எஸ்பி மதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

News April 14, 2026

தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஆசிரியர் பெருமக்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால்
15ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவு.

News April 14, 2026

அம்பையில் நூதன முறையில் வாக்கு சேகரித்த வேட்பாளர்!

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ராஜகோபால் வேட்பாளராக களம் இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார். விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது அங்குள்ள புரோட்டா கடை ஒன்றுக்குள் சென்று புரோட்டா மற்றும் ஆம்லெட் போட்டு வாக்கு சேகரித்த அவர் கடையில் உணவருந்திக் கொண்டிருந்தவர்ளிடமும் விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

News April 14, 2026

அறிவித்தார் ராமநாதபுரம் கலெக்டர்!

image

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 21 முதல் 23 வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆகிய தேதிகளில் அரசு மற்றும் தனியார் மதுக்கடைகளை மூட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். விதிகளை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

News April 14, 2026

காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் சமோசா போட்டு பிரச்சாரம்

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார், கருக்கிழி அமர்ந்தவர் கோவில் தெரு அருகே உள்ள சமோசா குடோன் பகுதியில் சமோசா போட்டு கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். உடன் கட்சி நிர்வாகிகள் திரளானோர் உடனிருந்தனர்.

News April 14, 2026

செங்கை: ரயிலில் இழுத்து செல்லப்பட்ட பயணி

image

மும்பையில் இருந்து காரைக்கால் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கை ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது, தலுபுரி குரு(24) என்பவர் உணவு பொருள் வாங்க இறங்கியுள்ளார். அப்போது ரயில் புறப்படவே பதட்டமான அவர் உணவு பொருட்களோடு ரயிலில் ஏறமுயன்றுள்ளார். இந்த நிலையில் அவர் கால் தவறி விழுந்ததில் இழுத்து செல்லப்பட்டார். ரயில்வே போலீசார் அவரை காப்பாற்றினர்.

News April 14, 2026

நாமக்கல்: கட்டுக் கட்டாக சிக்கிய பணம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பணம் & பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க 13 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் நேற்று முன் தினம் வரை வரை ரூ.1 கோடியே 69 லட்சத்து 81 ஆயிரத்து 332-ஐ பறிமுதல் செய்து உள்ளனர். இதில் ஆவணங்கள் சமர்ப்பித்த பின் ரூ.1.51 கோடி திருப்பி வழங்கப்பட்டு, மீதமுள்ள தொகை வருமானவரித்துறைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணையில் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிப்பு.

தருமபுரி வரும் CM ஸ்டாலின்

image

தருமபுரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து CM ஸ்டாலின் நாளை(ஏப்.15) பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். நாளைய தினம், தருமபுரி தடங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், 5 தொகுதிகளில் போட்டியிடும் திமுக (ம) கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

error: Content is protected !!
↑