Tamilnadu

News April 14, 2026

சென்னையில் 6 ரவுடிகள் அதிரடி கைது!

image

தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், அயனாவரம் பகுதியைச் சேர்ந்த விமல் குமார், பி.கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார், திரு.வி.க. நகர் காவல் நிலையத்துக்குட்பட்ட விஜய், புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கணேசன், சீனிவாசன் மற்றும் சஞ்சய் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் 2 வயது குழந்தை உயிரிழப்பு

image

கோவை சின்னியம்பாளையம் தனியார் மில் குடியிருப்பில் தங்கியுள்ள ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மானசி போலாவின் இரண்டு வயது மகன் ஆதித்யா, நேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தான். இது குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்தம்பித்த செங்கல்பட்டு!

image

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணியை ஆதரித்து செங்கல்பட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் செங்கல்பட்டு நகர பகுதியில் அதிகபடியான மக்கள் கூடியதால் செங்கல்பட்டு மதுராந்தகம் செல்லகூடிய பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிருஷ்ணராயபுரத்தில் ஜான்பாண்டியன் பிரச்சாரம்

image

கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் திவ்யாவை ஆதரித்து, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கிருஷ்ணராயபுரம் கடைவீதி பகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 14, 2026

திண்டிவனத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

image

விழுப்புரம்: திண்டிவனம் சட்டமன்ற தொகுதியின் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விசிக வேட்பாளர் வன்னி அரசை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டர்கள் ஆரவாரமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடினர். இதில், திரளான திமுக, விசிக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News April 14, 2026

நாகை மாவட்டத்தின் சிறப்பு அம்சங்கள்!

image

நாகை மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா… ?
1. 141 கி.மீ தூரம் கடற்கரையை கொண்ட மாவட்டம்
2. சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற மாவட்டம்
3. நாகூர் தர்கா
4. வேளாங்கண்ணி மாதா பேராலயம்
5. சிக்கல் சிங்காரவேலர் கோவில்
6. கோடியக்கரை பறவைகள் சரணாலயம்
7. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த மாவட்டம்.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News April 14, 2026

திருச்சி: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

image

மணப்பாறை அடுத்த அனியாப்பூரை சேர்ந்தவர் சுப்ரமணி(52). இவர் ஒரு சிறுமியிடம் தவறான செய்கைகளை காட்டி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாயார், மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!
↑