Tamilnadu

News April 14, 2026

கிருஷ்ணகிரி: கிணற்றில் சடலம் மீட்பு

image

போச்சம்பள்ளி அடுத்த மஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர் (46). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணிக்கு சந்திரசேகருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள, 60 அடி ஆழ கிணற்றில் சடலமாக அவரின் சடலம் கிடப்பது தெரியவந்தது. உடலை மீட்ட பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 14, 2026

சிவகாசி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

சிவகாசி நாரணாபுரம் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போஸ் காலனி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்திய போலீசார் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 30க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News April 14, 2026

நெல்லையில் 8 பேர் பரபரப்பு கைது!

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா கீழ வீரராகவபுரத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் சின்னகுட்டி என்பவர் காயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் செந்தில் தங்கதுரை விசாரணை நடத்தி, வன்முறையில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 8 பேரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தார்.

News April 14, 2026

திண்டுக்கல்: டூவீலர் விபத்தில் சிறுவன் துடிதுடித்து பலி

image

நத்தம் அருகே சின்னமலையூரை சேர்ந்தவர் சத்யா(17) இவர் நேற்று தனது நண்பருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமரபட்டி மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சத்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். நத்தம் போலீசார் விசாரணை.

News April 14, 2026

ரா­ம­நா­தபுரம்: தட்டி தூக்கிய தேர்தல் பறக்கும் படை!

image

ரா­ம­நா­தபுரம் மாவட்டத்தில், தேர்­தல் நன்­ன­டத்­தை­ விதி­கள் நடை­மு­றை­யில் உள்ள­தால், தேர்­தல் பறக்­கும் படை­ மற்றும் நிலை­யா­ன­ கண்­கா­ணிப்பு குழுவினர் கண்­கா­ணிப்­பு­பணி­க­ளில் ஈடுபட்டு ­வ­ருகின்­றன. அதன் அடிப்­ப­டையில் நேற்று முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உரி­ய­ அனுமதி இன்­றி­ வாகனத்தில் கொண்­டு­ வந்­த­ அதிமுக நோட்டீஸ் மற்றும் கட்சி துண்டுகளை பறிமுதல் செய்தனர்.

News April 14, 2026

ஓமலூர்: மனைவி, மகளை கொலை செய்து கணவன் தற்கொலை

image

ஓமலூர் அருகே பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஸ்ரீவித்யா கொல்லப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, அவரது கணவர் விஜய முருகன் தனது 3 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்துத் தானும் தற்கொலை செய்துகொண்டார். குடும்பத் தகராறால் ஏற்பட்ட இந்த விபரீத முடிவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

News April 14, 2026

மதுரையில் போட்டியிடும் சுந்தர் சி மீது பாய்ந்த வழக்கு!

image

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சாா்பில் சுந்தா் சி. போட்டியிடுகிறாா். எல்லீஸ் நகா் பகுதி கிறிஸ்தவ தேவாலய வளாகத்துக்குள் மத வழிபாட்டின் போது, கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட சால்வையை அணிந்து, தோ்தல் நடத்தை விதிகளை மீறி வாக்கு சேகரித்ததாக காவல் உதவி ஆய்வாளா் முத்தையா புகாா் அளித்தாா். இதையடுத்து, சுந்தா் சி. மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 14, 2026

குமரி: விபத்தில் பெண் பலி; உடல் உறுப்புகள் தானம்

image

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த லதா ஏப்.,3ம் தேதி தனது மகன் சபனுடன் பைக்கில் சென்றபோது லதா பைக்கிலிருந்து கீழே விழுந்தார். அதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை GH-ல் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் GH-ல் சேர்த்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

News April 14, 2026

மனைவியை கொன்ற கணவர்: புதுச்சேரியில் பரபரப்பு

image

புதுச்சேரியில், சந்தேகத்தின் பேரில் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட மெக்கானிக்கை, தன்வந்திரி காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

News April 14, 2026

பெரம்பலூர்: வேட்பாளர்கள் செலவு கணக்குகள் ஆய்வு

image

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்குகளை முதற்கட்டமாக ஆய்வு செய்யும் பணி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் செலவின பார்வையாளர் அனுஜ் கார்க், வேட்பாளர்கள் செலவு கணக்குகளை ஆய்வு செய்தார்.

error: Content is protected !!
↑