India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) விருதுநகர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் 05.02.2026 க்குள் <

அருப்புக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயபால்(41). இந்நிலையில் ஜெயபால் கடந்த 7 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் நேற்று ஜன.8 மாலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே லாக்கரிலிருந்து 14.1/2 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க.

விருதுநகர் இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன் 40. இவரை 2010 ல் வீடு புகுந்து மூன்றரை பவுன் நகை திருடிய வழக்கில் டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த இவர் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை.இந்நிலையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை டவுன் போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் பாலகங்காதரன் திமுகவில் இணைந்தனர். 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலகங்காதரன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானது குறிப்பிடத்தக்கது.

சிவகாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரை
சித்தப்பா முறையான தாயின் தங்கை கணவர் ஓரண்டாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமிக்கு கடந்த 2021-ம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. இந்த வழக்கில் ஸ்ரீவி.,போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு 4 பிரிவுகளில் தலா 20 ஆண்டுகள், கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டுகள் என 82 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

விருதுநகர் ஆத்துப்பாலம் அருகே நேற்று இரவில் அடையாளம் தெரியாத ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அல்லம்பட்டியை சேர்ந்த பொன்ராஜ்(32) தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் பொன்ராஜை அடித்து கொலை செய்து தீ வைத்து எரித்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மக்களே இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <
Sorry, no posts matched your criteria.