Virudunagar

News January 2, 2026

விருதுநகர்: 12th தகுதி… ரயில்வே வேலை ரெடி

image

விருதுநகர் மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து ஜன.29க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். இந்த நல்ல தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 1, 2026

விருதுநகரில் இனி 1000 பேருக்கு IT வேலை

image

ஐடி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், நெல்லை, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்காக தற்போது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பூங்காவிலும் குறைந்தது 500 – 1,000 பேர் வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT

News January 1, 2026

விருதுநகர்: 10th தகுதி.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

விருதுநகர் மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து ஜன.8க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News January 1, 2026

விருதுநகர் வாலிபருக்கு புத்தாண்டு நிகழ்வில் கத்தி குத்து

image

விருதுநகர் திருச்சுழியை சேர்ந்த ஆனந்தராஜ்(29) கொட்டாம்பட்டி யூனியன் அலுவலக புதிய கட்டிடத்தில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். நேற்று புத்தாண்டு கொண்டாடத் திற்காக கொட்டாம்பட்டி டாஸ்மாக் கடைக்கு சென்றவர், நள்ளிரவு கத்தி காயங்களுடன் இறந்து கிடந்தார். கொட்டாம்பட்டி விஏஓ மூர்த்தி கொடுத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் கொலையாளிகள் குறித்து இன்று விசாரித்து வருகின்றனர்.

News January 1, 2026

விருதுநகர் மக்களே அரசு பஸ்ஸில் பிரச்னையா.!

image

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/ குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94450 30516 இந்த எண்ணல் புகார் தெரிவிக்கலாம். அனைவருக்கும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 1, 2026

விருதுநகர்: வயிற்று வலியால் பரிபோன உயிர்

image

சிவகாசி அருகே சேர்வைக்காரன்பட்டியை முத்துக்கருப்பன் என்பவரது மனைவி செல்வி(33). செல்விக்கு பாலமுருகன் என்ற மகனும் பவானி(10) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சிறுமி பவானி அருப்புக்கோட்டை அருகே போடம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இன்று உயிரிழந்தார். இது குறித்து பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News January 1, 2026

சிவகாசி அருகே மது பாரில் லோடுமேன் மீது தாக்குதல்

image

சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரை சேர்ந்தவர் லோடுமேன் வனபாண்டி (20). இவர் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள மது பாரில் மது அருந்தியுள்ளார். அப்போது அவருக்கும் ,ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்த மாரியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டது.அப்போது ஆத்திரமடைந்த மாரியப்பன் அவரது ஆதரவாளர்கள் கார்த்திகேயன், மணிமாறன், மாரீஸ்வரன் ஆகியோர் வனபாண்டியை கல்லால் தாக்கினர். இதில் வனபாண்டி பலத்த காயமடைந்தார்.

News January 1, 2026

விருதுநகர்: ரேஷன் கடையில் பிரச்னையா.?

image

விருதுநகர் மக்களே, உங்க ரேஷன் கடையில் சரியாக அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கவில்லையா? உடனே புகார் பண்ணுங்க.
1.ராஜபாளையம் – 04563220500
2.ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260209
3.சாத்தூர் – 04562260220
4.சிவகாசி – 04562224260
5.விருதுநகர்- 04562243493
6.அருப்புக்கோட்டை – 04566220219
7.திருச்சுழி – 04566282222
8.காரியாபட்டி – 04566255570
9.வெம்பக்கோட்டை – 04562284202
10.வத்திராயிருப்பு – 04563288800

News January 1, 2026

விருதுநகர்: எஸ்.ஐ, ஏட்டு மீது வழக்கு பதிவு.!

image

அ.முக்குளம் எஸ்.ஐ., மணிகண்டன் வாக்கி டாக்கியை தொலைத்த விவகாரத்தில் தவக்கண்ணன் மீது பொய் வழக்கு பதியப்பட்டது. இதில் பொய் வழக்கு போட்ட போலீசாருக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் தவக்கண்ணன் வழக்கு தொடர்ந்ததில் எஸ்.ஐ.,மணிகண்டன், போலீஸ் ஏட்டு செல்வராஜ் மீது FIR பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டது. இவர்கள் இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!