Virudunagar

News January 8, 2026

விருதுநகரில் பரபரப்பு….. எரிந்த நிலையில் உடல் மீட்பு

image

விருதுநகர் ஆத்துப் பாலம் அருகே நிறைவாழ்வு நகர் சர்ச் எதிரே நீர்வரத்து ஓடையில் நேற்று இரவு 7:00 மணிக்கு அடையாளம் தெரியாத ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. பஜார் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படும் போலீசார் அவரது பெயர், விபரம் குறித்து விசாரிக்கின்றனர்.

News January 8, 2026

விருதுநகர்: இந்தியன் ஆயிலில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மொத்தம் 8 விதமான பணிகளுக்கு 394 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12, டிப்ளமோ, B.E படித்தவர்கள் ஜன.9க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News January 8, 2026

விருதுநகர் அருகே தகர செட்டில் பட்டாசு தயாரிப்பு

image

வெம்பக்கோட்டை அருகேயுள்ள கீழக் கோதை நாச்சியார்புரம் பகுதியில் போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது வெள்ளை மருது 33, என்பவர் தனது வீட்டுக்கு அருகில் தகர செட் அமைத்து பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பட்டாசுகள், மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News January 8, 2026

விருதுநகர்: EXAM இல்லை.. போஸ்ட் ஆபீஸ் வேலை ரெடி!

image

விருதுநகர் மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 8, 2026

விருதுநகர் அருகே பெண் திடீர் தற்கொலை

image

அருப்புக்கோட்டை திருநகரத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் என்பவரது மனைவி தில்லை சிவகாமி(52). அர்ச்சுணன் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இறந்த நிலையில் தில்லை சிவகாமி மன சோர்வுடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தில்லை சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.‌ டவுன் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 8, 2026

விருதுநகர் ஒரே நாளில் 415 பேர் கைது

image

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என்ற முதல்வரின் தேர்தல் வாக்குறுதி 313ஐ நிறைவேற்றுதல் உள்பட பல அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் பவுன்தாய் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.
மறியலில் ஈடுபட்ட 415 பேரை சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.

News January 7, 2026

BREAKING விருதுநகர்: கொலையில் மேலும் ஒருவர் கைது

image

காரியாபட்டி அருகே ஆவியூரில் கஞ்சா போதையில் வீட்டு பிரச்சினை காரணமாக ராமசாமி(33) என்பவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பிரவீன்(20), அவரது நண்பர்களான செல்லப்பாண்டி(19), கருப்பசாமி (18), சஞ்சீவ்(18) ஆகிய 4 பேர் சரணடைந்த நிலையில் அவர்கள் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கிய அன்பரசனை(24) போலீசார் தற்போது கைது செய்தனர்.

News January 7, 2026

விருதுநகர்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

image

விருதுநகர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க

News January 7, 2026

விருதுநகர் : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

விருதுநகர்: 10th போதும் அரசு வேலை – APPLY!

image

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்<>கு: CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!