India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் 604039 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கம் ஜன.13 க்குள் அனைவருக்கும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தால் அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் நேற்று முதல் துவங்கியது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 6 லட்சத்து 4,039 அரிசி ரேஷன் கார்டு தாரர்கள், இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன்கள் நேற்று முதல் துவங்கி நாளை வரை ரேஷன் விற்பனையாளர்கள் மூலம் கார்டுகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படுகிறது.

விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் ராமச்சந்திரன். இவர் உயர் அதிகாரிகளான இன்ஸ்பெக்ட,ர் எஸ்ஐ ஆகியோரின் உத்தரவுகளை மதிப்பதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ராமச்சந்திரன் வாகனத்தில் பட்டாசுக்கான திரிகளை கடத்திச் செல்பவர்களிடம் பணம் வசூலில் ஈடுபட்டதாக புகார் வந்தது. இது குறித்த விசாரணையில் எஸ்பி கண்ணன் ராமச்சந்திரனை ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

கூமாப்பட்டி ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன்(30) நெடுங்குளத்தில் தனது உறவினர் செல்வராணி வீட்டில் தங்கியிருந்து கூலி வேலைக்கு செய்துவந்தார். இந்நிலையில் இன்று காலை செல்வராணியின் சகோதரர் சுந்தரலிங்கம் என்பவர் ஈஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டு ஈஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தார். ஆவியூரில் இன்று காலை ராமசாமி (32) படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் 2 கொலைகள் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரியாபட்டி தாலுகா ஆவியூர் கிராமத்தில் இன்று காலை ஆவியூர் பஸ் ஸ்டாப் அருகில் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த இராசுதேவர் என்பவர் மகன் இராமசாமி (32) கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி உமா(19) தென்காசி தனியார் காவலர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இவர் நேற்று அதே கல்லூரியில் பயிலும் ராஜேஷ் (25) என்பவருடன் பைக்கில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ராஜேஷ், உமாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின், வெம்பக்கோட்டை போலீசில் நேற்று சரண் அடைந்த ராஜேஷை கழுகுமலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனி வங்கிக்கோ (அ) அடிக்கடி UPI-ஐ திறந்து பார்க்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 9076030001
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

பணத்தை மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஶ்ரீவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரி குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் கே.டி.ஆர் உள்பட 3 பேர் ஆஜராகததால் வழக்கு விசாரணையை ஜன.23 -ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

வெம்பக்கோட்டை VAO சக்தி கணேசன், 2025-ல் வி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த கணேச பாண்டியனின் தகர செட்டை சோதனை செய்தார். அங்கு அனுமதி இன்றி, வெடிகள் இருந்ததை அடுத்து, தகர செட்டிற்கு சீல் வைத்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்ற தலைமை எழுத்தர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு தகர செட்டில் இருந்த பட்டாசுகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.