India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்து ஏப்ரல் 7ம் தேதி மாரத்தான் ஒட்டப் போட்டி நடைபெறுகிறது என கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார். காலை 6 மணிக்கு திண்டுக்கல் சாலை SBI வங்கி முன்பு தொடங்கி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடிவடைகிறது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் என்ற https://forms.gle/9YJRchS5DK1eCxJr6 6ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 74017 03504.

கோடைகால விடுமுறை கூட்ட நெரிசலைத் தவிர்க்க, திருச்சி – பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வரும் 7-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நான்கு சேவைகளாக இந்த ரயில் இயக்கப்படும். பயணிகள் இந்தச் சேவையை முன்னதாகவே திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஏப். 2) மாலை 5 மணிக்கு நடைபெறும் தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். சூலூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கட்டக்குடியை சேர்ந்தவர் ராமசாமி(55). தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கொடும்பாளூர் சத்திரம் ஐடிஐ அருகே நிறுத்தி இருந்த லாரி மீது மோதியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர், சம்ப இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாகை ரயில் நிலையத்தில் காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 பேரிடம் 40 சாராயப்பாட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், 2 பேரும் மருந்து கொத்தளம் தெருவை சேர்ந்த அஜித்குமார்(27), செங்குட்டுவன்(35) என தெரியவந்தது. இதனையெடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாடபுரம், துறைமங்கலம், செங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் மாவட்டத்திற்கான காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அனூப் ஏ ஷெட்டி நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி கேரளா மற்றும் அசாம் மாநில தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடக்க உள்ள நிலையில் நீலகிரி தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர்கள் சரவணன் மற்றும் வினோத் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் குறித்த புகார்களுக்கு 9994380605, 9080832123,
9600908630, 9894109673.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் அஜய் ராஜ் தலைமையிலான குழுவினர், அம்மாபேட்டை கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நான்கு சக்கர வாகனத்தில் எவ்வித ஆவணங்களும் இன்றி ஹேமலதா என்பவரால் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.66,840 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து, பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் வரதராஜனிடம் ஒப்படைத்தனர்.

Sorry, no posts matched your criteria.