India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (ஆகஸ்ட் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
மேகேதாட்டு அணை குறித்து காவிரி நடுவர் மன்றம் பேசுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி கீழ்பகுதியில் உள்ள அரசின் அனுமதி பெற்றால் மட்டுமே மேகேதாட்டில் அணையைக் கட்ட முடியும் என்பதால் தமிழக அரசு மேல் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறிய அவர், கர்நாடக அரசு அங்கே தடுப்பணையைக் கட்ட தமிழக அரசு நிச்சயம் அனுமதிக்காது என உறுதிபட கூறியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் இசையை போற்றுவதற்கும், விமர்சிப்பதற்கும்கூட ஒரு தகுதி வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 80 வயதைக் கடந்த இளையராஜா, 4 தலைமுறைக்குப் பின்னரும்கூட, இசை உலகத்தில் தனக்கான இடத்தைத் தக்கவைத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்த தமிழ் உலகத்தையும் ஈர்த்த, அதிரவைத்த அவரது இசையால் கவரப்பட்டவர்களில், தானும் ஒருவன் எனத் தெரிவித்துள்ளார்.
*சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார் – அன்புமணி
*வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி தருவோம் – சித்தராமையா
*இஸ்ரேல் பாதுகாப்புக்காக கூடுதல் ராணுவத்தை அனுப்ப அமெரிக்கா முடிவு
*2023-24ஆம் நிதியாண்டில், வருமான வரி தாக்கல் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.5% அதிகரித்துள்ளது.
*Paris Olympics 9 Day: பதக்கப் பட்டியலில் இந்தியா 49ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இன்று (ஆகஸ்ட் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
*உங்கள் அலாரத்தை வழக்கத்தை விட தினமும் 15 நிமிடங்கள் குறைக்கலாம். உதாரணமாக, 8 மணிக்கு எழுபவர்கள் 7.45க்கு அலாரம் வைக்கலாம். *சீக்கிரம் எழுவதற்கு, இரவில் உடலுக்கு போதுமான ஓய்வை அளிக்க வேண்டும். அதற்கு இரவில் அதிக நேரம் விழிக்காமல், முன் கூட்டியே தூங்க வேண்டும். *சீக்கிரம் எழுந்திருக்க மனதளவில் தயார்படுத்துங்கள். இது உடலில் உள்ள பயாலஜிக்கல் கிளாக் மூலம் நம்மை சரியான நேரத்தில் எழுப்பும்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் கிராமத்தில் வெயில் வாட்டி வரும் நிலையில், AC வழங்கப்படாததால் இந்திய வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், பிரான்ஸ் தூதரகத்துடன் கலந்துரையாடி நமது வீரர்களுக்கு 40 போர்ட்டபிள் ஏர் கண்டிஷனர்களை இந்திய விளையாட்டு அமைச்சகம் வழங்கியுள்ளது. கார்பன் எமிஷனை குறைப்பதற்காக அப்பகுதிகளில் AC பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை & புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மணிநேரமாக மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த சில மணி நேரமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நந்தனம், கிண்டி, தாம்பரம், கோயம்பேடு, அம்பத்தூர், மாதவரம், பெரம்பூர், கொளத்தூர், எழும்பூர், ஆலந்தூர், சைதாப்பேட்டை, தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ தங்கள் தளத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட சைவ உணவுகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் பெரும்பாலோனோர் மசாலா தோசையை அதிகமாக ஆர்டர் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து பன்னீர் பட்டர் மசாலா, தால் கிச்சடி, பன்னீர் பிரியாணி, மார்கெரிட்டா பீட்சா மற்றும் பாவ் பாஜி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு பிடித்த உணவு எது?
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளார். இதற்காக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கேரள அரசிடம் வழங்கியுள்ளார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாகும் டிடிஎப் வாசன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதன் மூலம் அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.
Sorry, no posts matched your criteria.