News August 19, 2024
எந்த கையில் ராக்கி கட்ட வேண்டும்?

சகோதர – சகோதரிகளுக்கு இடையிலான உறவுப் பிணைப்பின் விழாவாக கருதப்படும் ரக்ஷாபந்தன் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. ராக்கி கட்டும் பாரம்பரியம் இன்றுவரை தொடர்ந்தாலும், எந்த கையில் கட்ட வேண்டும் என பலருக்கும் தெரியவில்லை. இந்த நன்னாளில் வலது மணிக்கட்டில் மட்டுமே ராக்கி கட்ட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படி கட்டினால்தான் இருவர் வாழ்விலும் என்றென்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்குமாம்.
Similar News
News January 24, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 590 ▶குறள்: சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை. ▶பொருள்: ஓர் ஒற்றரின் திறனை வியந்து, பிறர் அறிய அவருக்கு சிறப்பு செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
News January 24, 2026
EB கட்டணம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்

இந்த செயல்பாடுகள் 10% வரை மின்சார இழப்பை ஏற்படுத்தும்: *TV-யை ஆஃப் செய்து, Set-top box-ஐ அப்படியே விடுதல் *ரிமோட்டில் மட்டும் off செய்துவிட்டு, ஸ்விட்சை off செய்யாதது *AC remote-ஐ மட்டும் off செய்துவிட்டு, Stabilizer-ஐ அப்படியே விடுதல் *பயன்பாடு இல்லாமல் ஸ்விட்ச் போட்ட நிலையில், போன் சார்ஜர் இருத்தல். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தாத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு र1000 வரை கூடுதலாக செலவாகிறது.
News January 24, 2026
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நடிகர் கைது

மும்பையின் ஓஷிவாராவில் உள்ள குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு முன் குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வந்த போலீசார், இதில் கமால் கானுக்கு தொடர்பு இருப்பதாக அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கில் அவரை கைது செய்தனர்.


