News August 19, 2024
இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்

தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என RMC எச்சரித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், தி.மலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. தொடர்ந்து, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
PM மோடியின் மதுரை பொதுக்கூட்டத்தை தடுத்த EPS

மதுரையில் வரும் 23-ம் தேதி PM மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் திடீரென மதுராந்தகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கு EPS தான் காரணம் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திருப்பரங்குன்றத்தில் PM மோடி தரிசனம் செய்வதாக இருந்தது. இதனால், சிறுபான்மையினரிடம் ADMK-க்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவும் போய்விடும் என EPS தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
News January 15, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 15, தை 1 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 1:00 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News January 15, 2026
ELECTION: தவெகவுடன் கூட்டணி அமைக்கிறதா SDPI?

மக்களுக்காக உழைப்பதற்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக SDPI தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மாஸ் லீடராக வரும் விஜய், மக்களுக்கு பணி செய்ய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். இம்மாத இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் எங்கள் கட்சி மாநில குழு கூட்டம் நடைபெறும். அதில் தவெகவா அல்லது யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


