News August 19, 2024

CM ஸ்டாலினுக்கு இணைச் செயலாளர் நியமனம்

image

CM-க்காக இணை செயலாளர் என்ற புதிய பதவி தற்காலிகமாக ஓராண்டு காலத்துக்கு தமிழக அரசு உருவாக்கியுள்ளது. 1954 IAS சட்டம் 4(2) விதியின்கீழ் முதல்வருக்காக இணைச்செயலர் பதவி உருவாக்கப்பட்டு, அதில் தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி இடமாறுதல் செய்யப்பட்டு நியமிக்கப்படுவதாக அரசு கூறியுள்ளது. இதனால் காலியாகும் அந்த இடத்திற்கு, பொது நூலக இயக்குநர் இளம்பகவத் நியமிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News January 21, 2026

நடிகர் கமல் ராய் காலமானார்

image

மலையாள நடிகரும், நடிகை ஊர்வசியின் சகோதரருமான கமல் ராய் (54) மாரடைப்பால் சென்னையில் காலமானார். தமிழில் ‘புதுசா படிக்கிறேன் பாட்டு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், சாயுஜ்யம், கொல்லிலக்கம், மஞ்சு, கிங்கினி, கல்யாணசௌகாந்திகம், வச்சலம், ஷோபனம், தி கிங் மேக்கர் மற்றும் லீடர் உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News January 21, 2026

தப்புக் கணக்கு போட்டாரா செங்கோட்டையன்?

image

அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சி கை கொடுக்காமல் போனதால் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். ஆனால், தற்போது NDA கூட்டணியில் இணைந்த <<18913412>>TTV தினகரனை<<>> EPS வரவேற்றுள்ளார். அதேபோல, NDA கூட்டணியில் OPS மீண்டும் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், செங்கோட்டையன் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

News January 21, 2026

உலகளவில் 3-ம் இடம்: இந்திய விஸ்கியின் விலை ₹10 லட்சம்!

image

2025-26-ம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த விஸ்கி பிராண்டுகளை Jim Murray’s Whisky Bible பட்டியலிட்டுள்ளது. உலகம் முழுவதும் 4,000 விஸ்கி பிராண்டுகளை ஆய்வு செய்து இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், உலகின் நம்பர் 1 இடத்தை அமெரிக்காவின் ‘Full Proof 1972 Bourbon’ பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் ‘The Expedition (15 year Old Single Malt)’ 3-ம் இடத்தில் உள்ளது. இதன் விலை ₹10 லட்சமாகும்.

error: Content is protected !!