News August 19, 2024
தமிழகத்தை உலுக்கும் மேலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்

பொள்ளாச்சி சம்பவத்தை போல், கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் நடந்த போலி NCC முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டையே அதிர வைத்திருக்கிறது. ஏற்கெனவே, மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் அரசியல் பிரமுகர் உட்பட பலர் கைதாகி, விசாரணை நடைபெறுகிறது.
Similar News
News January 20, 2026
Sports 360°: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

*SAFF ஃபுட்ஸல் சாம்பியன்ஷிப்பில், இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது *ஆசிய மகளிர் ரைஸிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் பிப்.22-ல் தாய்லாந்தில் தொடங்குகிறது *சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பஞ்சாப் அணிக்காக சுப்மன் கில் விளையாடுவார் என தகவல் *T20 உலகக் கோப்பை தொடரின், முதல் சில போட்டிகளில் பேட் கம்மின்ஸ் விளையாடமாட்டார் என அறிவிப்பு
News January 20, 2026
ஐநாவுக்கு செக் வைக்க முயலும் டிரம்ப்

ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘போர்டு ஆப் பீஸ்’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்ளார். இந்த அமைப்புக்கு டிரம்ப் தலைமையேற்றுள்ள நிலையில், இதில் ₹9000 கோடி கட்டணம் செலுத்தி மற்ற நாடுகள் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாத உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகள் வரை அந்த அமைப்பில் இருக்கலாம் எனவும் அமெரிக்கா விளக்கியுள்ளது.
News January 20, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 586 ▶குறள்: துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. ▶பொருள்: ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.


