India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இளையராஜா பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார் என தயாரிப்பாளர் கே.ராஜன் விமர்சித்துள்ளார். படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு தான் பாட்டும் இசையும் சொந்தம் என்ற அவர், வீடு கட்டும் கொத்தனாருக்கு வீடு சொந்தமாகாது என்றார். தன் பாடலை வணிக நோக்கத்தோடு யாரும் பயன்படுத்த கூடாது என இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், திரைத்துறையில் பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
*தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்லுங்கள். படுக்கையறையில் அதிக வெளிச்சம் வேண்டாம். *படுக்கையறையில் மொபைல், லேப்டாப் பயன்படுத்துவதை தவிருங்கள் *தூங்கும் முன்பு மனதை குழப்பும் விஷயங்களை தவிர்க்க வேண்டும். ஜர்னல், டைரி எழுதும் பழக்கம் மனதை லேசாக்கும் *உறங்கும் முன் லேசான அசைவுகள் கொண்ட யோகா, தியானம், ஆழமாக சுவாசித்தல் போன்ற பயிற்சிகள் செய்யலாம்.*மெல்லிய இசை கொண்ட பாடல்களை கேட்கலாம்
மோடியின் துணிச்சலான முடிவால்தான் இந்தியாவில் பெட்ரோல் விலை உயரவில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாதென
இந்தியாவுக்கு நிர்பந்தம் தரப்பட்டதாகவும், ஆனால் இதை மோடி கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நிர்பந்தத்துக்கு கட்டுப்பட்டு இருந்தால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.20 உயர்ந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
தூக்கத்தில் காணும் கனவு பலிக்குமா, பலிக்காதா என்பது குறித்து ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இரவு என்பது 4 யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. முதல் யாமத்தில் கண்ட கனவு ஒரு ஆண்டுக்குள்ளும், 2ஆம் யாமத்தில் கண்ட கனவு 8 மாதத்துக்குள்ளும், 3ஆம் யாமத்தில் கண்ட கனவு 3 மாதத்துக்குள்ளும், 4ஆம் யாமத்தில் கண்ட கனவு 10 நாள்களுக்குள்ளும், அதிகாலைக் கனவு உடனடியாகவும் பலிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்படுவேன் என பெண்கள் ஹாக்கி அணியின் புதிய கேப்டன் சலிமா டெடெ தெரிவித்துள்ளார். புரோ ஹாக்கி போட்டிகளில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக கூறிய அவர், கோப்பையை வெல்ல கடினமாக முயற்சிப்போம் என்றார். இங்கிலாந்தில் ஜூன் 1இல் தொடங்கும் இந்தப் போட்டியில் ஜெர்மனி, இங்கிலாந்துடன் இந்தியா மோதுகிறது. ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்த சவிதா புனியா, சில நாள்களுக்கு முன் நீக்கப்பட்டார்.
பர்பிள் கார்னர் நோட்டீஸ் என்றால், மோசடிச் செயல்பாடுகள், நடைமுறைகள், பொருட்கள், சாதனங்கள் (அ) குற்றவாளிகள் பயன்படுத்தும் மறைவிடங்கள் குறித்த தகவல்களை வழங்குவது. இந்த நோட்டீஸ்களை பிறப்பித்து, அதன்மூலமே இன்டர்போல் நடவடிக்கை எடுக்கும். இந்தியாவில் இன்டர்போல் அமைப்பின் கிளையாக சிபிஐ செயல்படுகிறது. வெளிநாடுகளில் தப்பிய குற்றவாளிகள், இந்தியாவில் பதுங்கும்பட்சத்தில் சிபிஐ மூலமே கைது செய்ய முடியும்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா, புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இதுவரை சென்னை அணியில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை பெற்ற தோனியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். தோனி 15 முறை அந்த விருதை வென்ற நிலையில், ஜடேஜா 16ஆவது முறையாக இன்று ஆட்டநாயகன் விருதை பெற்றார். இன்றைய போட்டியில் 4 ஓவர் பந்து வீசிய அவர், பஞ்சாப்பின் முக்கியமான 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
யெல்லோ கார்னர் நோட்டீஸ் என்றால், காணாமல் போன நபரைக் கண்டறிய (அ) தன்னை அடையாளம் காண முடியாதிருக்கும் ஒரு நபரை அடையாளம் காண்பதற்கானது. பிளாக் கார்னர் நோட்டீஸ் என்றால், அடையாளம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களைத் தேடுவதற்கானது. ஆரஞ்சு கார்னர் நோட்டீஸ் என்றால், நபர்கள் மற்றும் சொத்துகளுக்கு ஆபத்தைக் குறிக்கும் உடனடி அச்சுறுத்தல்களான நிகழ்வு, நபர், பொருள் (அ) செயல் குறித்து எச்சரிப்பது.
ப்ளூகார்னர் நோட்டீஸ் எனில், குற்றவியல் விசாரணையில் தொடர்புடைய ஒருவரைக் கண்டறிதல், அடையாளம் காணுதல் (அ) தகவல்களைப் பெறுவதற்கானது. ரெட்கார்னர் நோட்டீஸ் எனில், தேடப்படும் ஒரு நபரின் இடம் கண்டறிதல், கைது செய்திட அல்லது ஒப்படைக்கும் நோக்கில் தேடுவது. க்ரீன் கார்னர் நோட்டீஸ் என்றால், பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு நபரின் குற்றச் செயல்கள் குறித்து எச்சரிக்கை செய்வதற்கானது.
சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போல், பிரான்சின் லியான் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. உறுப்பு நாடுகள், குற்றவாளிகள் குறித்து தகவலை அளித்து உதவி கோரினால், அவர்களை கைது செய்ய இன்டர்போல் உதவி செய்யும். இதற்காக ரெட், யெல்லோ, ப்ளு, பிளாக், க்ரீன், ஆரஞ்ச் மற்றும் பர்பில் நிற நோட்டீஸ்களை தனித்தனியே வெளியிடும். இன்டர்போல் வெளியிடும் 7 நிற நோட்டீஸ்களுக்கும் தனித்தனி அர்த்தம் உண்டு.
Sorry, no posts matched your criteria.