News June 16, 2024
ராஜமௌலி பட வாய்ப்பை மறுத்த தமிழ் நடிகை

ராஜமௌலி இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது இன்று பல நடிகர்களின் கனவாக உள்ளது. ஆனால், ஆரம்ப காலத்தில் அவர் இயக்கத்தில் த்ரிஷா நடிக்க மறுத்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 2010ல் அவர் இயக்கத்தில் வெளியான ‘மரியாதை ராமண்ணா’ படத்தில் காமெடி நடிகர் சுனிலுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா மறுத்ததாக கூறப்படுகிறது. இப்படம் தமிழில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது
Similar News
News January 18, 2026
₹16 லட்சம் கோடியை எட்டும் சில்லறை ஆடை வணிகம்

நாட்டில் சில்லறை ஆடை வணிகம் 2030-ம் ஆண்டுக்குள் ₹16 லட்சம் கோடியாக விரிவடையும் என்று ‘CareEdge’ தெரிவித்துள்ளது. தற்போது, சில்லறை வணிகம் ₹9.3 லட்சம் கோடியுடன் சந்தையில் 41% பங்கைக் கொண்டுள்ளது. பிராண்டட் ஆடைகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், இது மேலும் 13% வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2 & 3 அடுக்கு நகரங்களில் ஜூடியோ, மேக்ஸ், ரிலையன்ஸ் உள்ளிட்டவை வணிகத்தை விரிவுபடுத்தி வருகின்றன.
News January 18, 2026
விக்ரம் சாராபாய் பொன்மொழிகள்

*முன்னேற விரும்பினால், புதிய பாதைகளைத் தேடத் தயங்கக்கூடாது. *இளைஞர்களின் கனவுகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குகின்றன. *இரைச்சலுக்கு மத்தியில் இசையை கேட்கத் தெரிந்தவனால் மகத்தான சாதனைகளை நிகழ்த்த முடியும். *விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானவை. *ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் அறிவியல் மனப்பாங்கில் தான் அடிப்படையாக உள்ளது.
News January 18, 2026
சவுதி அரேபியாவில் அரிய சிறுத்தை மம்மிகள்

வடக்கு சவுதி அரேபியாவில் உள்ள குகைகளில் அரிய சிறுத்தை எச்சங்களை (மம்மிகள்) கண்டுபிடித்துள்ளனர். அவை 130 – 1800 ஆண்டுகள் பழமையானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அரார் நகருக்கு அருகே 7 சிறுத்தை மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றுடன் 54 சிறுத்தை எலும்புகளும் இருந்தன. பாலைவனங்கள், பனிப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் மம்மிகேஷன் இயற்கையாகவே நிகழ்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


