India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989. ஷேர் பண்ணுங்க.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கான நில அளவை பயிற்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (ஜன.21) நடைபெற்றது. வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் உதவி இயக்குநர் (நில அளவையர்) குமணன் உட்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

செங்கம் பகுதியை சேர்ந்த குணால் (24). இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். வழக்கு தொடர்பாக நேற்று (ஜன.20) திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சோதனையில் இவர் ஆசனவாயிலில் 10 கிராம் கஞ்சா பொட்டலம் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பாகாயம் போலீசில் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே! இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் 1 டிகிரி முடித்திருந்தால் போதும். விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க<

வேலூர் மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த<

வேலூர் அடுத்த சலவன்பேட்டையை சேர்ந்தவர் சாந்தி (55). இவர் கடந்த 17-ம் தேதி அப்பகுதியில் நடந்து சென்ற போது இவரது கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென பறித்துக்கொண்டு தப்பினார். இதில் கைப்பையில் இருந்த ரூ. 4,000 மற்றும் செல்போனை பறிபோனது. இது தொடர்பாக வேலூர் தெற்கு போலீசார் நேற்று கே.கே.நகரை சேர்ந்த சித்திக் (37) என்பவரை கைது செய்து பணம், செல்போனை பறிமுதல் செய்தனர்.

வேலூர்–ஆற்காடு சாலையில் ஒரே இடத்தில் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளிகள், குடியிருப்புகள் அருகே மதுக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பெண்கள், மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

வேலூரில் தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சத்துணவு ஊழியர்கள் நேற்று (ஜன.20) போராட்டத்தில் ஈடுபட்டனர். 2021 சட்டப்பேரவை தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 700 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த நடவடிக்கையால் வேலூர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர் சரகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் விதிமுறைகளை மீறிய 109 பேருந்துகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தமாக ரூ.21 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மக்களே! இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் <
Sorry, no posts matched your criteria.