India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரக்கோணத்தில் இருந்து வேலூர் செல்லும் பயணிகள் ரயில் நேற்று (ஜன.20) காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயிலில் பயணித்த 60 வயதுடைய முதியவர் சுயநினைவின்றி இருப்பதாக காட்பாடி ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், டாக்டர்கள் முதியவரை இறக்கி பரிசோதனை செய்தனர். அப்போது முதியவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குடியாத்தம் செருவங்கி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(45). தூய்மை பணியாளரான இவர், நேற்று(ஜன.20) குடியாத்தம் அடுத்த வள்ளிநகர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரியில் ஜன.23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வழித்தடப் பாஸ்களை வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஜன.20) வழங்கினார். மாணவர்களின் கல்வி, இலக்கிய ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் நேற்று (ஜன.20) குடிபோதையில் இருந்த நபர் அப்பகுதியில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் தனது சட்டைப் பையில் இருந்த 500 ரூபாயை எடுத்து கொடுத்து, தன்னுடன் வருமாறு அழைத்து கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அருகில் இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணனை நததி வருகின்றனர்.

பேரணாம்பட்டு பாகூர் உசேன் வீதியை சேர்ந்தவர் தமிழ் அழகன் (27), ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு மது போதையில் வீதிக்கிற்கு வந்த இவர் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் தமிழ்அழகன் வீட்டின் அறையில் இருந்த மின் விசிறியில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி 31-ம் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் தேர்வை எழுத 3,952 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 15 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. காலையில் நடக்கும் முதல்தாளில் கணிதம் தொடர்பான வினாக்களும், பிற்பகல் 2-ம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் தொடர்பான வினாக்களும் இடம் பெறும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் வேலூர் மாவட்டத்தில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ நாளை (ஜன.22) நடைபெற உள்ளது. இந்த ரத யாத்திரை வேலூர், கருகம்பத்தூர், கொணவட்டம், பொய்கை, அரியூர், தொரப்பாடி, அடுக்கம்பாறை, சாய்நாதபுரம், சங்கரன்பாளையம், வேலப்பாடி, மண்டித்தெரு, சத்துவாச்சாரி, காட்பாடி உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடைபெற உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (ஜன-20) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

Sorry, no posts matched your criteria.