Vellore

News January 21, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (ஜன-20) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News January 20, 2026

வேலூர் மக்களே.. இனி அலைய வேண்டாம்!

image

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் மேற்கொள்ளலாம்<<>>. மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 20, 2026

வேலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!

News January 20, 2026

வேலூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

வேலூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 20, 2026

வேலூர்: முருங்கைக்காய் விலை உயர்வு!

image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பனிப்பொழிவு காரணமாக முருங்கைகாய் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டிற்கு குறைந்தளவே முருங்கைக்காய் விற்பனைக்கு வருகிறது. எனவே அவற்றின் விலை கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதைத்தவிர மாங்காய், பூண்டு விலை சற்று அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

News January 20, 2026

வேலூர்: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு

image

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 20, 2026

வேலூர்: டூவீலர் ஃபைனை கேன்சல் செய்ய! (CLICK)

image

வேலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு கிளிக் செய்து<<>> உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

வேலூரில் 32,18,430 ரூபாய் வரி!

image

வேலூர் போக்குவரத்து சரகத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 804 ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் விதிமீறிய 109 பஸ்களுக்கு ரூ. 2 லட்சத்து 21 ஆயிரம் அபராதமும், பிற மாநில நுழைவுவரி செலுத்தாத பஸ்களிடம் இருந்து ரூ.32 லட்சத்து 18 ஆயிரத்து 430 வரி வசூல் செய்யப்பட்டது.

News January 20, 2026

வேலூர் சிறைக்கு திரும்பிய 29 கைதிகள்!

image

வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் இருந்து பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட 29 பேருக்கு பரோல் வழங்கப்பட்டது.‌ அதன்பேரில் கைதிகள் பரோலில் சொந்த ஊருக்கு சென்றனர். இந்நிலையில் பரோல் முடிந்து அனைத்து கைதிகளும் நேற்று (ஜன.19) மீண்டும் சிறைக்கு திரும்பினர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 20, 2026

வேலூரில் ‘இணைந்த கைகள்’ கையுந்து பந்து போட்டிகள்!

image

வேலூர் நேதாஜி மைதானத்தில் மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட கையுந்து பந்து சங்கம் சார்பில் ‘இணைந்த கைகள்’ கையுந்து பந்து போட்டி நேற்று (ஜன.19) தொடங்கியது. ​வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், விஐடி பல்கலைக்கழக து.தலைவரும், மாவட்ட கையுந்து பந்து சங்கத் தலைவருமான ஜி.வி. செல்வம் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் வேலூர் சரக டிஐஜி தருமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார.

error: Content is protected !!