Vellore

News January 20, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி இன்று (ஜன-19) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News January 19, 2026

வேலூர்: செவிலியர் துறையில் 999 காலிஇடங்கள் Apply Now!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

BREAKING: வேலூர் பள்ளி மதிய உணவில் பல்லியா?

image

வேலூர் மாவட்டம், அரசு உதவி பெறும் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மதிய உணவில் பல்லி இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் மாணவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவின் மாதிரியை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

News January 19, 2026

வேலூர் ஒழுங்குமுறை கூட விற்பனை நிலவரம்

image

வேலூர் டோல்கேட் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளின் இன்றைய (ஜன.19) விலை நிலவரம் வெளியாகி உள்ளது. இதில் 75 கிலோ நெல் மூட்டைகள் ரூ.1,550 – 2,060 வரையும், மகேந்திரா 606 ரகம் ரூ.1,451 முதல் 1,989, நர்மதா ரூ.1,090 – 2,050 வரையும், மணிலா (80 கிலோ) ரூ.8,020 முதல் 10,289,  கொப்பரை தேங்காய் ஒரு கிலோ 123 முதல் 180 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News January 19, 2026

வேலூரில் மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

image

வேலூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சாத்துமதுரை, கில்பள்ளிப்பேட்டை, காட்பாடி, பல்லூர், புன்னை, தக்கோலம், காந்திநகர் பகுதிகளிலும், போர்ட் ரவுண்ட் மற்றும் வேலூர் பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் தகுந்த ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News January 19, 2026

வேலூரில் மூதாட்டி திடீர் சாவு!

image

துத்திப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே நேற்று (ஜன.18) மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இவரை பொதுமக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுயநினைவின்றி காணப்பட்ட மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து பாகாயம் போலீசார் விசாரித்து நடத்தி வருகின்றனர்.

News January 19, 2026

வேலூர்: மாநகர காங்கிரஸ் தலைவர் நியமனம்

image

அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேலூர் மாநகர மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்த ராமனின் பதவி காலம் முடிவடைந்தது. இதையடுத்து வேலூரில் 32 ஆண்டுகளாக காங்கிரஸ் சிறுபான்மை அணி தலைவராக பணியாற்றி கொண்டிருக்கும் எம்.வாஹித் பாஷா இன்று (ஜன.19) மாநகர காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News January 19, 2026

அறிவித்தார் வேலூர் கலெக்டர்!

image

புதிரை வண்ணார் (SC) சமூக மக்களுக்கு சாதிச்சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, புதிரை வண்ணார் நல வாரிய அட்டை, போன்ற சான்றிதழ்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வரும் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற உள்ளது. வேலூர் வட்டாட்சியர் அலுவலகம், குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைப்பெற உள்ள இம்முகாம்களை பயன்படுத்துமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!