India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதர்கான் (62). இவர் கடந்த 19-ம் தேதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மனைவியுடன் சென்றார். நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தமபதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 12 கிராம் தங்கம், 400 கிராம் வெள்ளி மற்றும் ரூ.4,500 திருடபட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.வி.குப்பம் அருகே நேற்று (ஜன.21) ஆலங்கனேரி பகுதியை சேர்ந்த விஷால்(19) என்பவர் தண்ணீர் கேட்பதுபோல் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்தனர். வாலிபர் செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கநேரியை சேர்ந்தவர் விஷால் (19). இவர் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஏற்கனவே பல இடங்களில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பலமுறை புகாரில் சிக்கியவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விஷாலை நேற்று (ஜன.21) கைது செய்தனர்

தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலூர் ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகத்தில் நேற்று (ஜன.21) ஊழியர்கள் பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், பொதுமாறுதல், நீண்டகாலம் மற்றும் நீண்ட தூரம் கூடுதல் பணி வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அரசமரபேட்டையை சேர்ந்த 65 வயது பூக்கடை வியாபாரியிடம் அப்பகுதி வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் பெண், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி உள்ளார். இதை நம்பிய வியாபாரி கடந்த செப்டம்பர் மாதம் ரூ.15 லட்சத்தை அப்பெண்ணிடம் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்த லாபமும் கிடைக்காததால் தனது பணத்தை மீட்டு தருமாறு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்துள்ளார்.

கே.வி.குப்பம் அருகே பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜன.21) காலை திடீரென கார் ஒன்று பழுதடைந்து. அப்போது பின்னால் வந்த பைக் கார் மீது மோதியது. இதனால் பின்னால் வந்த காரை டிரைவர் நிறுத்த முயன்றார். உடனே பின்னால் வந்த லாரி டிரைவர் பைக் மீது மோதாமலிருக்க பிரேக் போட்டுள்ளார். இதனால் லாரியின் பின்னால் வந்த தனியார் பஸ், லாரி மீது மோதியது. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.

வேலூர் கொல்லைமேட்டை சேர்ந்த பெண் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் தையல் கடை வைத்து நடத்தி வருகிறேன். எனது கணவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். கடந்தாண்டு என் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 22 1/2 பவுன் நகை திருட்டு போனது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எஸ்பி நடவடிக்கை எடுத்து நகையை மீட்டுத் தர வேண்டும் என்றார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் பணி செய்து வருகின்றனர். அதன்படி நேற்று ஜனவரி 21 இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

Sorry, no posts matched your criteria.