India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூட்டுறவு துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கான, பணியாளர் நாள் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் நாளை (ஜன.9) நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஆறு கண் பாலம் அருகே அமைந்துள்ளது குழுமாயி அம்மன் கோயில். கிராம மக்கள் குழி வெட்டும்போது இந்த அம்மன் தோன்றியதால் குழுமாயி அம்மன் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. சோழர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்ட குழுமாயி அம்மன் தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளக்குகிறார். இந்த கோயிலில் குட்டிக்குடி திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இதனை SHARE பண்ணுங்க.

திருச்சி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <

திருச்சி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

திருச்சி மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் துறையூரில் இயங்கி வரும், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒரு வழக்கு பணியாளர் (case worker) காலி பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 17ஆம் தேதி மாலை 5 மணிக்குள், சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <

திருச்சி மாவட்டத்தில் உள்ள 8,35,844 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 980 குடும்பங்கள் என மொத்தம் 8,36,824 குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (ஜன.8) முதல் வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் அடிப்படையில் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.3,000 பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 8,35,844 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 980 குடும்பங்கள் என மொத்தம் 8,36,824 குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (ஜன.8) முதல் வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் அடிப்படையில் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.3,000 பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில், பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் வரும் 15, 16 ஆகிய தேதிகளில், தென்னூர் உழவர் சந்தை திடலில் நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள் குறித்த பணிகள் மேற்கொள்வதற்கும், மேலும் விபரங்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் சிவஞானவதியை (எண்:9486152007) தொடர்பு கொள்ளலாம் எனவும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையிடலாம் எனவும் ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.