India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரியகுளத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நந்தகிருஷ்ணா என்பவருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பாக நந்தகிருஷ்ணா மீது ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் விக்னேஷ் போனிற்கு நந்தகிருஷ்ணா பாலியல் தொந்தரவு சம்பந்தமாக ஆபாச படங்களை அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் நந்தகிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தேவாரத்தை சேர்ந்த லீலாவதி கணவர் இறந்த நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாா். இந்நிலையில் பூர்வீக சொத்து தொடர்பாக இவருக்கும், உறவினரான முருகனுக்கும் பிரச்சனை இருந்தது. இதையடுத்து நேற்று முன் தினம் தோட்டத்திற்கு வந்த முருகனின் மனைவி பந்தானலட்சுமி, மகன் யுவராஜ் ஆகியோர் லீலாவதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

தேனி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதில் தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும்.

கோம்பையை பகுதியை சோ்ந்த காய்கறி வியாபாரி ராஜ்குமாா் 2 தினங்களுக்கு முன் சாலையில் உடலில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். கொலை குறித்து போலீஸ் விசாரணையில் ராஜ்குமாருக்கும், முத்துராஜ் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்தது தெரியவந்தது. இதனால் முத்துராஜ் கூலிப்படை சேர்ந்த 2 பேருடன் ராஜ்குமாரை கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

தேனி மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04546-291566
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

ஆண்டிபட்டி அருகேயுள்ள தா்மத்துப்பட்டி விலக்கு பகுதியில் பால்ராஜ் என்பவா் டீக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது கடை அருகே பாப்பம்மாள்புரத்தை சோ்ந்த செல்வி என்பவா் மாட்டுத் தீவனக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பால்ராஜ், செல்வி ஆகியோரது கடைகளின் பூட்டை உடைத்து ரூ.98,000 மற்றும் 5,000 மதிப்பிலான பொருள்கள் திருபட்டன. இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவையின் 24-வது முகாம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (ஜன.10) நடைபெறவுள்ளது. முகாமில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், காசநோய், தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படும். எனவே, அப்பகுதி மக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 35 வயதிற்குட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.Tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் பிப்.5 க்குள் இந்த <

கம்பம் பகுதியை சேர்ந்தவர் சுதர்சணன் (28). கொத்தனாரான இவருக்கு சிறுவயது முதலே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது திடீரென வலிப்பு ஏற்பட்டு சுதர்சணன் தவறி கீழே விழுந்துள்ளார். இதில்படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு.
Sorry, no posts matched your criteria.