Theni

News January 11, 2026

தேனி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

News January 11, 2026

தேனி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04546-262112 அணுகலாம். SHARE பண்ணுங்க.

News January 11, 2026

தேனி: மது போதையால் நடந்த விபரீதம்..

image

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (52). இவருக்கும், இவரது மகனுக்கும் நேற்று முன் தினம் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது கர்ணன் அவரது மகனை கடுமையாக தாக்கி உள்ளார். இந்த செயல் குறித்து மனவேதனை அடைந்த கர்ணன் நேற்று (ஜன.10) அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 11, 2026

தேனி: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News January 11, 2026

போடியில் பாலியல் தொழில்… அதிர்ச்சி

image

போடி பகுதியை சேர்ந்தவர் காஜாமைதீன். இவரது மனைவி ரதியா பானு. இவர்களது நண்பர் குருவுலட்சுமி. இவர்கள் மூவரும் சேர்ந்து போடி பகுதியில் ஒரு வீட்டை வாடகை எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து போடி ஒன்றிய விரிவாக்க அலுவலர் பூபதி அளித்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் காஜாமைதீன், ரதியாபானு மற்றும் குருவுலட்சுமி மூவரையும் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 11, 2026

108 ஆம்புலன்ஸ் மூலம் ஓராண்டில் 36,779 பேர் பயன்

image

தேனி மாவட்டத்தில் 2 குழந்தைகள் வாகனம், 1 பைக், வெண்டிலேட்டர் வசதி கொண்ட 6 நவீன ஆம்புலன்ஸ் என மொத்தம் 26 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளது. இவை தேனி மருத்துகல்லுாரி, முக்கிய மருத்துவமனைகள், விபத்து அதிகம் நடக்கும் பகுதிகள் என ஆங்காங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 36,779 பேர் பயன்பெற்றுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

தேனி: போதையால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்

image

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராம்கி (32). இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (ஜன.10) தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகையினை வாங்கிய ராம்கி அதனை கொண்டு மது குடித்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். அதனால் மன வேதனை அடைந்த ராம்கி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.

News January 11, 2026

தேனி: ரூ.1000 வரலையா? இங்க புகார் பண்ணுங்க!

image

தேனி மக்களே, மகளிர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆவணங்களை பதிவேற்றம் செய்து புகார் அளியுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 11, 2026

தேனி: சிறுமியிடம் பழகிய இளைஞர் மீது போக்சோ..!

image

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமி. இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (21) என்பவர் காதலிப்பதாக கூறி நெருக்கமாக இருந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றொர் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் பாலசுப்பிரமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று (ஜன.10) வழக்குப்பதிவு செய்தனர்.

News January 11, 2026

தேனி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…!

image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிராதுக்காரன்பட்டியை சேர்ந்தவர் நித்யா (25). இவரது கணவர் கடந்த 2024-ஆம் ஆண்டு மின்னல் தாக்கிய விபத்தில் உயிரிழந்தார். அன்றைய தினத்திலிருந்து மன வருத்தத்தில் காணப்பட்டு வந்த நித்யா நேற்று முன் தினம் அவரது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!