Theni

News January 12, 2026

தேனி: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லேயே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <>க்ளிக் <<>>பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு.
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.

News January 12, 2026

தேனி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ரொம்ப EASY..

image

தேனி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in என்ற<<>> இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்!

News January 12, 2026

தேனி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து

image

இராஜதானி, கீழமஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று முன்தினம் அவரது ஆட்டோவில் 10 பயணிகளை ஏற்றி கொண்டு ஆண்டிபட்டி சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 10 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து இராஜதனி போலீசார் நேற்று வழக்குப்பதிவு.

News January 12, 2026

தேனி: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு

image

தேனி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். 94431 11912 என்ற எண்ணின் வாயிலாக எவ்வித அலைச்சலும் இல்லாமல் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணிலும் அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News January 12, 2026

தேனியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

தேனி பின்னத்தேவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (28). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் தீராத வலியில் இருந்து வந்த அஜித்குமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News January 12, 2026

தேனி: 10th தகுதி.. ரூ.28,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தேனி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News January 12, 2026

தேனி: மன வேதனையில் விஷம் குடித்து தற்கொலை

image

பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். அதன் காரணமாக நேற்று முன் தினம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு.

News January 12, 2026

தேனியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

image

கம்பம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.13) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், கம்பம், கூடலூர், உத்தமபுரம், துர்கையம்மன் கோயில், ஊத்துக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 12, 2026

தேனியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

image

கம்பம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.13) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், கம்பம், கூடலூர், உத்தமபுரம், துர்கையம்மன் கோயில், ஊத்துக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 11, 2026

தேனி: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க..

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு<> க்ளிக் <<>>செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க. இத்தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!