India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவரது வீட்டின் அருகிலேயே இவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் அசந்து தூங்கிய நிலையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை திருடி சென்றனர். திருட்டு சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் நேற்று (ஜன.11) வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சபரிமலை மகரஜோதி விழாவை முன்னிட்டு ஜன.14.ம் தேதி மாலை 5 மணி முதல் 15.ம் தேதி காலை 8 மணி வரை அனைத்து வாகனங்களும் கம்பம் புறவழிச்சாலை, கம்பம் மெட்டு வழியாக கேரளா செல்ல வேண்டும் எனவும். சபரிமலையில் இருந்து திரும்பும் பக்தர்கள் பம்பை, குட்டிக்காணம், பீர்மேடு, வண்டிப்பெரியாறு, குமுளி, கூடலூர், கம்பம் வழியாகத் திரும்பும் விதமாகவும் போக்குவரத்து மாற்றம் செய்து தேனி எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்மணி (75). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஆட்டோ இவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சந்தோஷ் மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் (ஜன.11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தேனி மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <

தேனி மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <

கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் அஜய் (25). இவர் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த இவரை நேற்று (ஜன.12) மா்ம நபா்கள் சிலர் சுருளிப்பட்டி – சுருளிஅருவி இடையே செல்லும் நெடுஞ்சாலையில் வைத்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் கடந்த சில நாட்களாக குழப்பத்தில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.11) நவநீதகிருஷ்ணன் வைகை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
Sorry, no posts matched your criteria.