India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சரண்யா (37). இவருக்கு கடந்த சில வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் வலியின் வேதனையில் இருந்து வந்த சரண்யா நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் நேற்று (ஜன.7) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ரூ.3000 பணம் வழங்க அரசு உத்தரவு பிறப்பித்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். அதற்கான புகார் எண்களை தெரிந்து கொள்ள <

அரண்மனைப்புதூரை சோ்ந்த மணிகண்டன், வினோத்குமாா் ஆகிய இருவரும் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் இடையே டைல்ஸ் உபரணங்கள் கொடுத்து வாங்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், மணிகண்டனை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் தேனி GH-ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிந்து வினோத்குமாரைக் கைது செய்தனா்.

அன்னஞ்சி, வைகை அணை துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.9) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அரைப்பாடிதேவன் பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி, வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ரூ.3000 பணம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதற்கான புகார் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேனி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <

தேனி மக்களே, தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆபத்தான இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ, அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். <

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (28). இவரது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் சில தினங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த உமா மகேஸ்வரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

தேனி மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு இங்கு <
Sorry, no posts matched your criteria.