Theni

News January 25, 2026

தேனி: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

News January 25, 2026

தேனி: மரக்கிளைகளை வெட்ட முயன்றவர் பலி

image

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (55). இவர் ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். தோட்டத்தில் உள்ள மரக்கிளைகளை அறுக்க முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு முனியாண்டிக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (ஜன.24) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு.

News January 25, 2026

தேனி: NO EXAM.. NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> செய்யவும். இந்த தகவலை SHARE

News January 25, 2026

தேனி: இளைஞர்கள் மீது தாக்குதல்

image

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (26). இவரது நண்பரான விருமாண்டி (28) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அபினேஷ் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன் தினம் அபினேஷ் உள்ளிட்ட நான்கு பேர் நவீன்குமார் மற்றும் விருமாண்டியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் கூடலூர் தெற்கு போலீசார் அபினேஷை நேற்று கைது செய்தனர்.

News January 25, 2026

தேனி: போடி அருகே ஒருவர் மீது தாக்குதல்

image

போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கும் நிலம் வாங்குவது தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இந்த முன் விரோதத்தின் காரணமாக ஆசைத்தம்பி தூண்டுதலின் பேரில் கருத்தப்பாண்டி உள்ளிட்ட ஆறு பேர் கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் போடி தாலுகா போலீசார் கருத்தபாண்டியை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

News January 25, 2026

தேனி: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

தேனி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 25, 2026

தேனியில் மோசடி செய்தவர் மீது வழக்கு

image

தேனியை சேர்ந்த பிச்சைமணி முகநூலில் கார் வாங்குவது குறித்து தகவல் தேடி வந்தார். அப்போது கோவையை சேர்ந்த பிரேம்சந்தர் என்பவர் தன்னிடம் ரூ.20.80 லட்சம் மதிப்பில் கார் உள்ளதாக கூறி பிச்சைமணியிடம் ரூ.2.50 லட்சம் முன்பணம் பெற்றுள்ளார். மீதி பணம் கட்ட பிச்சைமணி நேரம் கேட்ட நிலையில் பிரேம்சந்தர் காரை விற்றுவிட்டதாக கூறி பணத்தை தர மறுத்துள்ளார். இதுகுறித்து தேனி போலீசார் பிரேம்சந்தர் மீது வழக்குப்பதிவு

News January 24, 2026

தேனி: 21 வயது ஆகிவிட்டதா? ரூ.25 லட்சம் வரை மானியம்

image

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <>கிளிக் <<>>செய்யவும். ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடனுதவி கிடைக்கும். சுயதொழில் தொடங்க சூப்பர் திட்டம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News January 24, 2026

தேனி: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு..!

image

தேனி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்க இந்த 89033 31912 எண்ணிற்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு – 94987 94987 இந்த எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க

News January 24, 2026

தேனி : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தேனி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <>கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!