Theni

News January 28, 2026

தேனியில் இன்று மின் தடை அறிவிப்பு..!

image

தேனி மாவட்டம், மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.28) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அம்மாபட்டி, குச்சனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 27, 2026

தேனி : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

image

தேனி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News January 27, 2026

தேனி: பிறப்பு – இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க!

image

தேனி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் (அ) மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 27, 2026

தேனி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

தேனி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <>க்ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 27, 2026

தேனி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தேனி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. <>pmjay.gov.in இணையதளத்தில்<<>> ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 27, 2026

பெரியகுளம் அருகே பைக் மோதி விபத்து

image

பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணவம்சி தனியார் பள்ளியில் +1 படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற போது தபால் அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் கிருஷ்ணவம்சி (ம) பைக்கில் வந்த அஜித் (22) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.

News January 27, 2026

தேனி அருகே முதியவர் தற்கொலை

image

தேனி ஸ்ரீரங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (61). இவருக்கு சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் அதற்கு சிகிச்சை எடுத்து வந்தும் பலனளிக்காமல் இருந்து வந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த ராமசாமி சில தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு.

News January 27, 2026

தேனி அருகே முதியவர் தற்கொலை

image

தேனி ஸ்ரீரங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (61). இவருக்கு சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் அதற்கு சிகிச்சை எடுத்து வந்தும் பலனளிக்காமல் இருந்து வந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த ராமசாமி சில தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு.

News January 27, 2026

தேனி: NO EXAM.. ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மார்க் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 27, 2026

தேனியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

image

கண்டமனூா் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.28) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், எம். சுப்புலாபுரம், ஜி. உசிலம்பட்டி, சித்தாா்பட்டி, கணேசபுரம், ஜி. ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!