India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரியகுளம் பண்ணை வீட்டில் வைத்து இன்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து நிர்வாகிகள் தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் எனக் கூறியதால் ஆதரவாளர்களுக்கு இடையே திடீர் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், தேர்தல் நிலைப்பாடு குறித்து துண்டு சீட்டில் எழுதி தருமாறு நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் அறிவுறுத்தல்.

தேனி மக்களே, பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகப்படுத்த மகளிர் தொழில் முனைவோர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தொழில் தொடங்க மானியமாக 25% அல்லது அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசால் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் <

தேனி மாவட்டம், கூடலூர் தெற்கு போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக, நேற்று காமயகவுண்டன்பட்டி சாலை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள மயானத்தின் அருகே அபினேஷ் (19) என்ற இளைஞர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அபினேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதி மொக்கச்சாமி – ராணி அம்மாள். இவர்களது மகன் கார்த்தி (26) அல்லிநகரத்தை சேர்ந்த நிர்மலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று கார்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மக்களே, யூகோ வங்கியில் காலியாக உள்ள 173 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA முடித்தவர்கள் பிப். 2ம் தேதிக்குள் இங்கு <

உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மனைவி மஞ்சு. இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருந்தனர். இந்நிலையில் நேற்று கணவரின் வீட்டிற்கு சென்ற மஞ்சு அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ராஜாராம் மஞ்சுவை கத்தியால் குத்திவிட்டு போலீசில் சரணடைந்தார். உடனே அங்கு சென்ற போலீசார் மஞ்சுவை மீட்டு GH-ல் சேர்த்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜாராமை கைது செய்தனர்.

தேனி மாவட்டம், வருசநாடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகா (25). இவருக்கும், இவரது கணவருக்கும் சில வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கணவர் மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ஸ்ரீகா நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் இன்று 28.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.