Theni

News January 30, 2026

தேனி: பாலத்தின் மீது கார் மோதி விபத்து

image

ஆலப்புழாவை சேர்ந்தவர் ரியாஸ். இவர் தனது குடும்பத்துடன் காரில் தேனி சாலையில் சென்றுள்ளார். அப்போது சீலையம்பட்டி பகுதியில் வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பாலத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரியாஸ், அவரது மனைவி சபீனா, மகன் அஜ்மல்ரியாஷ் ஆகிய 3 பேரும் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து நேற்று சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு.

News January 30, 2026

தேனி: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

தேனி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar மொபைல் ஆப்பை<<>> அறிமுகம் செய்துள்ளது. இதில் நீங்கள் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடு செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 30, 2026

தேனி: பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தால் பரபரப்பு

image

தேவதானப்பட்டி அருகேயுள்ள புல்லக்காபட்டியில் நேற்று காலை விவசாயிகள் தங்களது தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மயானத்தில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் சடலம் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு தேனி GH-க்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனியில் மின் தடை பகுதிகள் அறிவிப்பு..!

image

வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தேனி கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், குன்னூர், வடபுதுப்பட்டி, கே.ஆர்.ஆர்.நகர், புதிய பேருந்து நிலையம், பாரஸ்ட்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE IT

News January 29, 2026

தேனி: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 29, 2026

தேனி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

தேனி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News January 29, 2026

தேனி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல தேவையில்லை!

image

தேனி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>aservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கவில்லை – OPS

image

பெரியகுளத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தொண்டர்களின் ஆதரவை நிரூபிக்கவே ராமநாதபுரத்தில் போட்டியிட்டோம். தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ, தனிக்கட்சி தொடங்குவது குறித்தோ இதுவரை முடிவெடுக்கவில்லை என தெரிவித்தார். மேலும், அதிமுகவை மீட்பதற்கான சட்டப்போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

error: Content is protected !!