India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் இன்று 23.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவை வருகிற 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது. மேலும், மேற்காணும் நாளில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

தேனி மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். அக்குபஞ்சர் மருத்துவரான இவர் நேற்று முன் தினம் மாலை வத்தலக்குண்டு – பெரியகுளம் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு.

தேனி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (40). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி கோபித்து கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த தெய்வேந்திரன் அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT

கம்பம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (35). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த ஒரு வருடங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். அதனால் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த அருண்குமார் நேற்று முன் தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

கம்பம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (35). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த ஒரு வருடங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். அதனால் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த அருண்குமார் நேற்று முன் தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Sorry, no posts matched your criteria.