India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (ஜன.9) கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.Tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் பிப்.5 க்குள் இந்த <

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் கணேசன் மகன் அபிதரன்(24). இவர் மதுரை ஒத்தக்கடையில் பண்னை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதை விட சிறந்த வேலை தேடி வந்தார் ஆனால் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்டவர். திருமங்கலத்தில் லாட்ஜ் ஒன்றில் இன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 லட்சத்து 2556 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள், மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 450 இலங்கை தமிழ் குடும்பங்களுக்கும் என 4 லட்சத்து 3006 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ரேஷன் கடைகளில் பகுதி வாரியாக ஜன.,11 வரை டோக்கன் வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரொக்கத் தொகை வினியோகம் தொடர்பான புகாருக்கு 1967, 1800-425-5901 எண்களில் மக்கள் தெரிவிக்கலாம்.

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு 108 அவசர ஊர்தி மூலம் 43,413 பேர் பயனடைந்துள்ளனர். அதன்படி விபத்தில் சிக்கியவர்கள் 7330, கர்ப்பிணிகள் 14643, இருதயம் பாதிப்பு 2656, சுவாச பிரச்னை 1836, வாதப் பிரச்னை 736, பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் 381 பேர் என மொத்தம் 43,413 பேர் பயன் அடைந்துள்ளதாக இராமநாதபுரம் மாவட்ட 108 சேவை மேலாளர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஜன.08) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலில் ஜனவரி. 11 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திருக்கோவில் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை நடை அடைக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். எனவே உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் நடை அடைப்பு நேரத்தில் வருகை புரிவதை தவிர்த்து கொள்ளும்படி அறிவித்துள்ளனர். *ஷேர்

இராம்நாடு மக்களே; மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். (or)
2.pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்கு பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.