Ramanathapuram

News January 12, 2026

ராமநாதபுரம்: லாரி மோதியதில் ஒருவர் பலி

image

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று காரில் ராமேவரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது பாப்பாகுடி பகுதியில் முன்னாள் சென்ற காரை முந்த முயன்ற போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் சென்ற சிவ்சரன்பால்(60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கார் ஓட்டுநர் யாஸ்சர்மா, லாரி ஓட்டுநர் டெக்கரேஸ்வரன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 11, 2026

ராமநாதபுரத்தில் கேஸ் புக் பண்ண புது வழி!

image

இராமநாதபுரம் மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

ராமநாதபுரத்தில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.ராமநாதபுரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04567-230444
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 11, 2026

ராமநாதபுரம்: 17 வயிறு சிறுவன் மீது போக்சோ

image

திருவாடானை அருகே 14 வயது சிறுமி, 17 வயது சிறுவன் இருவரும் அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் கல்வி பயின்று வரும் நிலையில் சிறுவன் சிறுமியிடம் நட்பாக பழகி வந்துள்ளான். இருவரும் பல தடவை தனிமையிலும் இருந்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமாகி உள்ளார். சிறுமியின் பெற்றோர் திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்

News January 11, 2026

ராமநாதபுரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 11, 2026

ராமநாதபுரம் அருகே பறிபோன 13 உயிர்கள்

image

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள நச்சம்மைபுரத்தை சேர்ந்த கவியரசன் என்பவருக்கு சொந்தமான 13 வெள்ளாடுகள் வழக்கம் போல் இறை தேடுவதற்கு வயல் வேலிக்கு சென்றுள்ளன. மர்ம நபர்கள் ஆடுகளுக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்துள்ளனர். விஷம் வைத்த உணவை சாப்பிட்ட ஆடுகள் துடி துடித்து இறந்தன. இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் கவியரசன் அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 11, 2026

ராம்நாடு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

image

ராமநாதபுரம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு CLICK<<>> செய்து மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவலுக்கு: 94987 94987 அழையுங்க. இந்த நல்ல தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News January 11, 2026

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு புயல் எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்ககடல் காற்றழுத்த தாழ்வு நிலை கரையினை கடக்க உள்ளதால் கடல்சார் வாரிய துறைமுக அலுவலகத்தில் திடீர் காற்றுடன் மழை பெய்வதை குறிக்கும் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 11, 2026

இராமநாதபுரம்: 2 டி.எஸ்.பிக்கள் அதிரடி இடமாற்றம்!

image

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 டி.எஸ்.பி.க்களை (துணை காவல் கண்காணிப்பாளர்) இடமாற்றம் செய்து, DGP வெங்கட்ராமன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இராமநாதபுரம் மாவட்டம், கமுதி துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த இளஞ்செழியன், பொருளாதார குற்றப்பிரிவு DSP ராஜமுரளி ஆகியோர் வேறு இடத்திற்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஜன.10) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!