Ramanathapuram

News January 2, 2026

ராமநாதபுரம்: ஒரே நாளில் 100 பேர் கைது

image

தொண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அதில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும், பேரூராட்சியின் தலைவர் மகன் பேரூராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை தடுக்கக் கோரியும் தொண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு த.மு.மு.க., உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்த ஏராாளமானோர் முற்றுகையிட்டனர். அனுமதி இல்லாமல் முற்றுகையிட்டதால் 100க்கும் மேற்பட்டவர்கள் மீது தொண்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.

News January 1, 2026

ராமநாதபுரத்தில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

ராமநாதபுரம் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் தூத்துக்குடி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000472, 9445000473 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு உடனே SHARE செய்யவும்.

News January 1, 2026

ராம்நாடு: 10th முடித்தால் ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

ராமநாதபுரம் மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து ஜன.8க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News January 1, 2026

ராமநாதபுரம்: GH-ல் இவை எல்லாம் இலவசம்

image

ராம்நாடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் ராம்நாடு மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04322-221733 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News January 1, 2026

ராமநாதபுரம் மக்களே அரசு பஸ்ஸில் பிரச்னையா.!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/ குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94450 30516 இந்த எண்ணல் புகார் தெரிவிக்கலாம். அனைவருக்கும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 1, 2026

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை

image

இராமேஸ்வரம் மீன் பிடி தளத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட விசை படகுகள் மீன் பிடிக்க திங்கள் கிழமை சென்றுள்ளனர். அப்போது மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டு இருந்த போது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஜோசப் கிராசியான் விசைப்படககுகளையும், அதில் இருந்த மூன்று மீனவர்களையும் சிறப்பிடித்தனர். யாழ்ப்பாணம் அழைத்து சென்று விசாரண.

News January 1, 2026

ராமநாதபுரம்: அனைத்து பிரச்னைகளும் தீர வாய்ப்பு.!

image

போகலுார் 74029 07610, கடலாடி – 74029 07614, கமுதி – 74029 07613, மண்டபம் – 74029 07606, முதுகுளத்துார் – 74029 07612, நயினார்கோவில் – 74029 07611, பரமக்குடி – 74029 07609, ஆர்.எஸ்.மங்கலம் – 74029 07607,
ராமநாதபுரம் – 74029 07604, திருப்புல்லாணி -74029 07605, திருவாடாணை -7402907608
எண்களுக்கு வாட்ஸ்ஆப் & 18004257040 எண்ணில் அடிப்படை தேவைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். SHARE பண்ணுங்க.

News January 1, 2026

ராம்நாடு: தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை

image

மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (46) என்ற மீனவர், நேற்று முன்தினம் இரவு சுந்தரமுடையான் பகுதியைச் சேர்ந்த மாலதி (36) என்ற பெண் குளித்து கொண்டிருந்தபோது அவரிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதால், ஆத்திரமடைந்த மாலதி மற்றும் அவரது தாய் ராக்கம்மாள் (70) ஆகிய இருவரும் கீழே கிடந்த கல்லை தலையில் போட்டதில் சம்பவ இடத்திலேயே வெள்ளைச்சாமி உயரிழந்தார்.

News January 1, 2026

ராமநாதசுவாமி கோவிலில் திருட்டு.!

image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவிலின் தூய்மை பணியாளர் பணி செய்யும் மணிகண்டன் என்பவர் உண்டியல் பணம் ரூ.1 லட்சத்தை திருடி உள்ளார். இதனை கோவில் அதிகாரிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்து காவல்நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 1, 2026

மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.31) மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஸ் தகவல் தெரிவித்தார்.

error: Content is protected !!