Ramanathapuram

News January 10, 2026

BREAKING: இராமநாதபுரம் கனமழை எச்சரிக்கை!

image

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (ஜன.10) சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்பொழுது இராமநாதபுரத்தில் வானம் இருண்ட நிலையில் குளிர் காற்றுடன் சூறாவளி காற்று வீசி வருகிறது. *ஷேர் பண்ணுங்க.

News January 10, 2026

இராம்நாடு இளைஞர்களே; ஜிம் போறீங்களா?

image

சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் ரூ.30 லட்சத்தில் புதிதாக முற்றிலும் குளிரூட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகள் இம்மாதத்திற்குள் முடிந்து விடும். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்து தனியார் உடற்பயிற்சி கூடங்களை விட குறைந்த மாதாந்திர கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது என மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் தெரிவித்தார். *ஷேர் பண்ணுங்க

News January 10, 2026

ராமநாதபுரம்: கந்து வட்டி தொல்லையா.?

image

1.காவல் கட்டுப்பாட்டு அறை 04567-230904,04567-230759,
2.ஹலோ போலீஸ் 83000 31100,
3.மாவட்ட தனிப்பரிவு 04567 290113 மற்றும் 94981 01615
துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள்:
1.ராமநாதபுரம் 94981 01616
2.பரமக்குடி 94981 01617
3.கமுதி 94981 01618,
4.ராமேஸ்வரம் 94981 01619,
5.கீழக்கரை 94981 01620, 94981 01621
6.முதுகுளத்தூர் 04567 290208 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

News January 10, 2026

பரமக்குடி வரும் தமிழக முதல்வர்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சந்தைக் கடை பின்புறம் ரூ 3 கோடி மதிப்பீட்டில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இந்நிலையில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு மண்டபத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க பரமக்குடிக்கு நேரடியாக இந்த மாதம் 17ம் தேதி வருகை தர உள்ளார், என அமைச்சர் ராஜ கண்ணப்பன் இன்று தெரிவித்தார்.

News January 10, 2026

ராமநாதபுரம்: இனி எல்லா CERTIFICATE-ம் உங்க WhatsAPP-ல்

image

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதில் தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

News January 10, 2026

ராமநாதபுரம்: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

ராமநாதபுரம் மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து (ஜன.11) நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க..

News January 10, 2026

ராமநாதபுரம்: ஒரே நாளில் 14 பேரை கடித்து குதறிய நாய்..!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரமக்குடி அருகே மஞ்சக்கொள்ளை கிராமத்தில் நேற்று மதியம் வெறிநாய் ஒன்று தெருவில் சுற்றி வந்துள்ளது. வீட்டு வாசலில் இருந்த பெண்கள், முதியவர்களை துரத்தி துரத்திக் கடித்தது முதியவர்கள் சிலர் தடுக்க முடியாமல் கீழே விழுந்தனர். இரு பெண்கள் உட்பட 14 பேரை நாய் கடித்தது. இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் GH-யில் அனுமதிக்கப்பட்டனர்.

News January 10, 2026

போலி நிதி நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கலாம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாத போலி நிதி நிறுவனங்கள், ஏலச்சீட்டு நிறுவனங்கள், மனை வணிக நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் மேலச்சோத்துரணி, சக்கரக்கோட்டை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 94981-07562, 83000-38265 கைப்பேசி எண்களிலோ புகார் தெரிவிக்கலாம் என பொருளாதாரக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ராஜமுரளி தெரிவித்தார்.

News January 9, 2026

இராம்நாடு: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க!

image

இராம்நாடு ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1967 அல்லது 18004255901 அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News January 9, 2026

ராம்நாடு: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

ராம்நாடு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

error: Content is protected !!